உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/388

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வி இயக்ககம் மக்கள் இயக்கமாகியது 351 அப்போது, தென் மாநிலப் பிராந்திய கெளன்சில்” கன்னியாகுமரியில், உள்துறை அமைச்சர் கோ. வ. பந்த் தலைமையில் கூடிற்று. அந்த மாநாட்டிற்குச் செல்கையில் 25-7-1958 அன்று கல்வி அமைச்சர், வள்ளியூர் மாநாட்டைத் தொடங்கி வைத்தார். வள்ளியூர் பகுதியில் 103 பள்ளிகளுக்காக, 1,27,000 ரூபாய் மதிப்புள்ள திட்டங்களை ஏற்றுக் கொண்டார்கள். மாநாட்டுக்கு முன்பு, 78,000 ரூபாய் மதிப்பிற்குத் திட்டங்கள் நிறைவேறிவிட்டன. கல்வி அமைச்சர் பாராட்டினார் காட்சியில் வைக்கப்பட்டு இருந்த, பள்ளக்கூடக் கல்விக் கருவிகளைக் கண்டு கல்வி அமைச்சர் பரவசமடைந்தார். எல்லோரையும் பாராட்டினார். m 'பகல் உணவுத் திட்டம், சீருடைத் திட்டம், பள்ளிச் சீரமைப்பு இயக்கம் ஆகிய முன்னோடித் திட்டங்களைத் தீட்டி மக்களைக் கொண்டே செயல்பட வைத்த நெ. து. சு. சிறந்த சாதனையாளர்' என்று போற்றினார். - மற்றப் பகுதி மக்களும் இத்தகைய முயற்சிகளை மேற்கொள்ளும்படி அறிவுரை கூறினார். வள்ளியூர் மாநாடு சிறப்பாக நடந்தது. அதனினும் சிறப்பாகத் திசையன்விளை மாநாடு அமைந்தது. 28-7-1958 அன்று நடந்த அம் மாநாட்டிற்கு அடியேன் தலைவர். முதலமைச்சர் காமராசர் திறப்பாளர். இம் மாநாட்டில் 102 பள்ளிகள் சேர்ந்தன. எடுத்துக்கொண்ட திட்டங்களின் மதிப்பு 1,38,000 ஆகும். சாதித்ததோ ரூபாய் 1,36,000 ஆகும். கிறித்தவ சமயத்தின் இரு பெரும் பிரிவுகளையும் சேர்ந்த பெரிய குருமார்களும் மேற்றிராணியார்களும் குழுமி இருந்தார்கள். அனைவர் முகங்களிலும் வெற்றி ஒளி தாண்டவமாடியது. “உங்கள் தலைமை யுரையைப் பின்னால் வைத்துக் கொள்ளுங்கள்” என்று கட்டளையிட்டார், முதலமைச்சர். எனவே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/388&oldid=788185" இலிருந்து மீள்விக்கப்பட்டது