உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

352 நினைவு அலைகள் காமராசரின் மகிழ்ச்சி உரை வரவேற்புகள் முடிந்து, அறிக்கை படிக்கப்பட்டதும் முதலமைச்சர் தொடக்கவுரை ஆற்றினார். அது நீண்ட உரை: தெளிவான உரை; பசுமரத்து ஆணிபோல், நெஞ்சில் பதிந்த உரை. முதலமைச்சர் தமது உரையின் முற்பகுதியில், பகல் உணவுத் திட்டங்களைச் செம்மையாக நடத்துவதையும், ஆங்காங்கே சீருடைகள் வழங்கி வருவதையும், பள்ளிச் சீரமைப்பு மாநாடுகள் வாயிலாகப் பள்ளிகளின் வசதிகளைப் பெருக்குவதையும் சுட்டிக் காட்டிப் பாராட்டினார். "இவற்றையெல்லாம் மக்கள் வெற்றிகரமாக நடத்துவதற்குக் காரணமென்ன? கடி “இது பொது மக்கள் சக்திக்கு உட்பட்டது. இவை, அவர்களுக்குச் சுமை அல்ல! “இப்படி மக்கள் எதைச் செய்யமுடியும், எதைச் செய்ய முடியாது என்பதை உணர்ந்து, அவர்கள் செய்யக் கூடியதை மக்களிடம் ஒப்படைக்கும் பூரீமான் (அவர் சூட்டிய அடைமொழி) நெ. து. சுந்தர்வடிவேல்ைப் பாராட்டுகிறேன். “கல்வித்துறை அலுவலர்களையும் பலநிலை ஆசிரியர் 'கள்ையும் நிர்வாகிகளையும் பொது மக்களையும் பாராட்டுவதோடு, ஆண்டுக்கு ஒரு முறையோ ஈராண்டுக்கு ஒரு முறையோ இப்படி மாநாடுகள் நடத்தி, பள்ளிகளைச் சீரமைத்துக் கொள்ளுங்கள். “ஆனால் ஒன்று, நீங்கள் நன்கொடையாகக் கொடுத்துள்ள பொருள்களைக் கொண்டு, ஆசிரியர்கள் முன்னைவிட நன்றாகப் பாடம் சொல்லிக் கொடுக்க முடியும். “பள்ளியில் படிப்போர் எல்லோரும்.ஒரே வகையினரா? “சிலருடைய பெற்றோர் ஒரளவு படித்தவர்கள். அத்தகைய குடும்பங்களில் இருந்து வரும் மாணாக்கருக்கு வீட்டிலும் பெற்றோர் சொல்லிக் கொடுக்க முடியும். o “பெரும்பாலோரின் பெற்றோர்கள் எழுத்தறிவு பெறாதவர்கள். "அவர்களுடைய பிள்ளைகள் பள்ளியில் எந்த அளவு, கற்றுக் கொள்ள முடிகிறதோ அவ்வளவே தங்கும். “முதல் தலைமுறை படிப்போருக்கு வீட்டில் கற்பிப்போர் இல்லாததால், பள்ளிகளிலேயே கூடுதலாகக் கற்பிக்க ஏற்பாடு செய்ய வேண்டாமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/389&oldid=788186" இலிருந்து மீள்விக்கப்பட்டது