உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

getfü Luilibeflü uyü - ömmerfeör futh 353 "அப்படி ஏற்பாடு செய்தால்தானே எல்லோரும் தேர்ச்சி பெற (Լքւգ-պւb. தேவைப்படுவோருக்குப் பள்ளிகளிலேயே கூடுதலாகப் பாடம் சொல்லிக் கொடுக்கும் பொறுப்பை ஆசிரியர்களே எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறேன்” என்று முதலமைச்சர் முடித்தார். ஆசிரியர்களின் வாட்டம் அத்தனை ஆசிரியர்களின் முகங்களும் வாடி விட்டன. எத்தனை பொறுப்புகளைச் சுமப்பது என்று எண்ணினார்கள் போலும்! அடுத்துப் பேசவேண்டியவன் நான். ஆசிரியர்களின் வாட்டம் என் கண்களில் பட்ட -து. கருத்தில் தைத்தது. எப்படிச் சமாளித்தேன்? 39. தனிப் பயிற்சிப் படிப்பு - காமராசரின் திட்டம் மூன்று திட்டங்கள் அமைதியாக எழுந்தேன். ஒலிப்பெருக்கியை மேடையின் விளிம்பிற்கு நகர்த்தினேன். நானும் அங்குச் சென்று நின்றேன். முதலமைச்சர் முதல், மேற்றிராணியார்கள், நிர்வாகிகள், தாய்க்குலம், பெரியோர்கள் அனைவரையும் விளித்தேன். இறுதியாக, 'இப் படை தோற்கின் எப் படை வெல்லும்’ என்னும் இலக்கணத்திற்கு இலக்கியமாகச் செயல்படும் தொடக்கப் பள்ளிகளின் இருபால் ஆசிரியத் தோழர்களே! என்று விளித்தபோது, ஆசிரியப் பெருமக்கள் கைதட்டிப் பேரொலி எழுப்பினார்கள். --- சில வினாடிகள் சும்மா இருந்தேன். பின்னர் அமைதி நிலவிற்று. "இந் நாடு நம் அனைவருக்கும் உரியது. எனவே இந் நாட்டின் பாதுகாப்பு மட்டுமல்லாது இதன் வளர்ச்சியும் மேம்பாடும் மக்கள் அனைவருக்குமான பொறுப்பாகும். "அண்ணல் காந்தியடிகளார், 'கடையரும் கடைத்தேறவே தன்னாட்சி என்று கூறி வந்ததை மறக்கலாமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/390&oldid=788188" இலிருந்து மீள்விக்கப்பட்டது