பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனிப் பயிற்சிப் படிப்பு - காமராசரின் திட்டம் 355 “இவற்றைச் செயல்படுத்தும் பள்ளிகளிலும் இவை இளம் கன்றுகள், இவை வேரூன்றி மரங்களாக உயர அதிக விழிப்போடு காக்க வேண்டும். மேலும் சுமையா? 'அதற்கு முன்பே, மேலும் ஒரு பொறுப்பை ஏற்றுக்கொள்ள முடியுமா என்று மலைக்கிறீர்களா? “மயில் இறகே ஆயினும் அளவிற்குமேல் அடுக்கினால், வண்டியின் அச்சு முறியும் என்று நீங்கள் கற்றுத் தரும் திருக்குறளை மறக்கவில்லை. “உங்களை, இன்ன தேதிக்குள் இவ்வளவு செய்தாக வேண்டு மென்று கெடுபிடி செய்வோர் எவருமில்லை. “அதனால்தான், பகல் உணவுத் திட்டத்தைக்கூட இன்னும் தொடங்காத பள்ளிகள் ஆயிரக்கணக்கில் உள்ளன. “அந்தந்தப் பகுதி மக்களும், ஆசிரியர்களும் குழலும் பக்குவமாகக் கனிந்த பிறகே, இத் திட்டங்களைத் தொடங்கு 'துரக்கக் கூடிய சுமையைத்தான், துாக்க முடியுமென்பது எங்களுக்குத் தெரிகிறது. “உங்களுக்கு உள்ள தெம்பில், நீங்கள் பெறும் ஆதரவின் அளவிற்கு ஏற்பத் திட்டங்களை ஏற்றுக்கொண்டு செய்வன திருந்தச் செய்து வெற்றி வாகை சூடுங்கள்” என்று முடித்தேன். - பேச்சின் ஊடே பாரதியார் வரிகளும், பாரதிதாசன் வரிகளும் பொங்கி வந்து உணர்ச்சியூட்டின. நான் என் பேச்சை முடிக்கும் வரையில் இப்படி அப்படித் திரும்பிப் பார்க்கவே இல்லை. முதலமைச்சரும் மற்றப் பெரியவர்களும் என் உரையை எப்படி ஏற்கிறார்கள் என்பதை, பேச்சுக்கு இடையில் தெரிந்து கொள்ள விரும்பாததால், அப்படிச் செயல்பட்டேன். என் உரை, முனைப்பால் வந்ததல்ல, குறுக்கே பேசும் அசட்டுத் துணிவால் வந்ததும் அல்ல.

  • கீழோராயினும் தாழ்வுரைக்கும்’ இயல்பினனான நான், ஆசிரியப்படையின் முதல் தொண்டனாக, முதல்தரமான தோழனாக, பாதுகாவலனாக இயங்க வேண்டிய நிலை, மனம் திறந்து பேசத் துண்டியது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/392&oldid=788190" இலிருந்து மீள்விக்கப்பட்டது