உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/393

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

356 நினைவு அலைகள் உள்ளத்தில் உண்டான உண்மை ஒளி, வாக்கினிலே சுடர் விட்டது என் உரை முதலமைச்சர் காமராசரைக் கவர்ந்தது போலும். நான் என் இருக்கைக்குவரத் திரும்பிய அதே நொடி, தலைவர் அனுமதியோடு ஒரு சொல்’ என்று முதலமைச்சர் ஏதோ கூறத் தொடங்க, 'அய்யா! தாராளமாக’ என்று சொல்லியபடியே ஒலி பெருக்கியை அவரிடம் ஒப்புவித்தேன். மீண்டும் பேசினார் காமராசர் "நான் நாள்தோறும் ஆசிரியர் கூட்டங்களில் பேசமுடியுமா? பேசுகிறபோது, சில கருத்துகள் தோன்றுவது இயல்பு. அவற்றை அப்போதே சொல்லிவிடுகிறேன். இல்லை என்றால், பல வேலைகளில், புதிய கருத்துகள் மறந்து போகலாம். "நான் சொல்வதை எல்லாம், சொன்ன உடனேயே செய்துவிட முடியுமா? பயிருக்குக் காலம் வேறுபடுவதுபோல், திட்டங்களை நிறைவேற்றுவதற்கும் வெவ்வேறு காலம் பிடிக்கும். - “எந்தத் திட்டத்தை எப்போது தொடங்குவது, எவ்வளவிற்கு நிறைவேற்றுவது என்பதை எல்லாம் ஆசிரியர்களாகிய நீங்கள், அலுவலர்களோடும் இயக்குநரோடும் கலந்து பேசி முடிவு செய்து கொள்ளுங்கள். 'உள்ள பிரச்சினையையும் அதற்குப் பரிகாரத்தையும் சொல்லி விட்டேன். அவ்வளவுதான்” என்று முதலமைச்சர் விளக்கினார். ஆசிரியர்கள் நீண்ட கையொலி எழுப்பி அதை வரவேற்றனர். முதலமைச்சர், சினங்கொள்ளாது, ஆசிரியர்களை அரவணைத்துக் கொண்டுபோனது, அவருடைய புகழை வளர்த்ததோடு ஆசிரியர் சமுதாயத்திடையே ஒர் அர்ப்பன உணர்வைக் கொழுந்துவிட்டு எரியச் செய்தது. ஆசிரியர்களின் தியாகம் சில திங்களில், பல தொடக்கப் பள்ளிகள் "மெல்லக் கற்போருக்காகப் பள்ளியிலேயே எவ்வித கட்டணமுமின்றிக் கூடுதல் பாடம் சொல்லிக் கொடுக்க முன்வந்தன. நடுநிலைப் பள்ளிகளும், உயர்நிலைப் பள்ளிகளும் முறை’ப் பாடங்களை நடத்தின. ==

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/393&oldid=788191" இலிருந்து மீள்விக்கப்பட்டது