பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

360 நினைவு அலைகள் புதிய காந்திய வழியில் மாநிலந் தழுவிய கல்விச் சீரமைப்பில் பங்குகொண்ட ஒவ்வொரு மாநாடும் தனித்தனியே குறிப்பிடத் தக்கவையே அரசு அலுவலர்க்குக் கட்சிக் கண்ணோட்டம் வேண்டாம் எனினும், இடத்தின்-காலத்தின்-பொறுமையின்-அருமை சிலவற்றைப் பற்றி மட்டுமே சொல்லி நிறைவு கொள்கிறேன். சேலம் மாவட்டம் ஆத்தூரில் பள்ளிச் சீரமைப்பு மாநாடு நடத்த முன்னேற்பாடுகள் செய்து கொண்டிருந்தபோது, 1967 ஆம் ஆண்டில் பொதுத் தேர்தல் வந்தது. ஏற்கெனவே, சட்டமன்ற உறுப்பினராகவும், பள்ளிச் சீரமைப்புக் குழுவின் தலைவராகவும் இருந்த காங்கிரசுக்காரர் - திரு. அங்கமுத்து நாயக்கர் தோல்வி அடைந்தார். சென்னைச் சட்டமன்ற மேலவையில் இந்திரா காங்கிரசுக் கட்சியின் தலைவராக விளங்கிய திரு. எம். பி. சுப்பிரமணியம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வெற்றி பெற்றார். தேர்தல் முடிவு வெளியானதும், திரு அங்கமுத்து நாயக்கரே கல்வி அலுவலரிடம், “நான் பதவியை விட்டுவிடுகிறேன். புதிய சட்டமன்ற உறுப்பினரை, பள்ளிச் சீரமைப்புக் குழுவிற்குத் தலைவராக இருக்கும்படி கேட்டுக் கொள்ளுங்கள்” என்றாராம். மாவட்ட அலுவலர் திரு. சங்கரன் பிள்ளை, அவரிடம் பொறுத்திருக்கும்படி சொல்லிவிட்டு, சென்னைக்கு வந்து சேர்ந்தார். என்னைக் கண்டு, “எங்கள் நிலைமை சங்கடமானது. பழைய சட்டமன்ற உறுப்பினர் விலகிக் கொள்வதை ஏற்றுக் கொண்டால், காங்கிரசுக்காரர்கள், அலுவலர்கள் சாக்கு கிடைக்கட்டுமென்று காத்திருந்தார்கள்; இப்போது தாங்கள் தி.மு.க.பற்று உடையவர் என்பதைக் காட்டிவிட்டீர்கள்’ என்று துாற்றக்கூடும். “பழையவரே இருக்கட்டும்: புதியவரையும் சேர்த்துக் கொள்வோமென்று நாங்கள் சொன்னால், தி.மு.க. வினர், எங்கள் மேல் எரிச்சல் கொள்வார்கள். எப்படி நடந்து கொள்வது என்று தெரியவில்லை. “தங்கள் ஆலோசனையைக் கேட்க வந்திருக்கிறோம்” என்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/397&oldid=788195" இலிருந்து மீள்விக்கப்பட்டது