பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/398

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனிப் பயிற்சிப் படிப்பு- கர்மராசரின் திட்டம் 361 “முதலமைச்சர், கல்வி பற்றிய முயற்சிகளில் கட்சிக் கண்ணோட்டம் வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார். கல்வி அமைச்சரின் கருத்தும் அதுவே. “அதனால்தான், காஞ்சிபுரத்தில் திரு ஏ. கே. தங்கவேலு முதலியாரும் வடார்க்காடு திருப்பத்துாரில் தி.மு.க. சார்புடைய திரு. இராகவ முதலியாரும் பகல் உணவுத் திட்டத்திற்குப் பொறுப்பேற்று நடத்துகிறார்கள். "திரு. அங்கமுத்து அவராகவே விலகுவதால், நிலைமை சற்று எளிதாகவே இருக்கும். திரு. எம். பி. சுப்ரமணியத்திடம், அண்ணா காஞ்சியில் பகல் உணவுத் திட்டத்திற்குத் திங்கள் தோறும் அய்ம்பது ரூபாய்கள் நன்கொடை அளிப்பதைச் சொல்லி, புதியவரின் ஒத்துழைப்பை நாடுவது நல்லது. "இருப்பினும் இன்று கல்வி அமைச்சரும் முதலமைச்சரும் ஊரில் இருக்கிறார்கள். அவர்களிடமும் ஒரு சொல் கேட்டு விடுவோம்” என்று கூறி, அவர்களைக் கோட்டைக்கு அழைத்தேன். முதலில் கல்வி அமைச்சரைக் கண்டோம். அவர் நான் நினைத்தது போலவே முடிவு சொன்னார். பின்னர், எங்களை முதலமைச்சரிடம் அழைத்துச் சென்றார். முதலமைச்சர் முடிவு என்ன? == 'அரசு ஊழியர்களுக்குக் கட்சிக் கண்ணோட்டம் வேண்டாம். அந்தந்தப் பகுதி மக்கள் யார் யாரைத் தேர்ந்து எடுக்கிறார்களோ அவர்கள் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்ளுங்கள். அதில் தவறு ஒன்று மில்லை” என்று கூறி அனுப்பினார். அச்சமின்றி அலுவலர்க்ள் ஊருக்குச் சென்றார்கள். * - ." - குழுவில் சிறிது மாற்றம் செய்தார்கள். முன் ஒப்புதல் பெற்று, திரு. எம். பி. சுப்ரமணியத்தைத் தலைவராகவும், திரு அங்க முத்துவைத் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கச் செய்தார்கள். முதலமைச்சர் காமராசர் வருகிற தேதியில்தான், பள்ளிச் சீரமைப்பு நடத்துவதாயிருந்தால், ஒப்புக்கொள்ளுகிறேன் என்று நிபந்தனை விதித்தார், எம். பி. சுப்பிரமணியம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/398&oldid=788196" இலிருந்து மீள்விக்கப்பட்டது