பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/399

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

352 நினைவு அலைகள் == என்னே பெருந்தன்மை முதலமைச்சர் 7-10-1958 அன்று காலையில் ஆத்துார் மாநாட்டிற்கு நேரம் ஒதுக்கினார். குறிப்பிட்டபடி வந்து சேர்ந்தார். திமுக சட்டமன்ற உறுப்பினர், ஆர்வத்தோடு வரவேற்றார். பொது மக்கள் வரிசையாக வந்து நன்கொடைகள் சிலவற்றை முதலமைச்சரிடம் கொடுத்தார்கள். அவர்களில் ஒருவர், அறிஞர் அண்ணாவின் படம் ஒன்றை அளித்துப் பள்ளியொன்றின் பெயரைச் சொல்லி, அதற்கு வழங்கும்படி கேட்டுக் கொண்டார். அவையோர், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். பல ஆசிரியர்கள், ஆய்வாளர், அலுவலர் முகங்களில், ஈயாடவில்லை. முதலமைச்சர் எரிச்சல் கொள்ளவில்லை. குறிப்பிட்ட பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் கொடுக்கும்போதும் புன்முறுவலோடு இருந்தார். முதலமைச்சர் உரையாற்றுகையில் மாநாட்டுக் குழுவிற்குத் தாராளமாக நன்றி கூறினார். பள்ளிகளின் தேவைகளைக் கூடிய மட்டில் உள்ளூர் நன்கொடைகளைக் கொண்டு நிறைவேற்றிக் கொள்வதின் தேவையையும், நன்மையையும் எடுத்து உரைத்தார். உரைகளின் இறுதியில், "நாங்கள் எங்களுக்குத் தேவையானதை உங்களிடம் கேட்கிறோம். கொடுக்கிற நீங்கள், உங்களுக்குப் பிடித்ததையும் சேர்த்துக் கொடுக்கிறீர்கள். அவ்வளவுதான்” என்று சிரித்துக் கொண்டே கூறினார். எல்லோருடைய பதற்றமும் தணிந்தது. அதைப்பற்றி முதலமைச்சர் தனியாகவும் ஒன்றும் சொல்ல வில்லை. என்னே பெருந்தன்மை! விருதுநகளில் 13-10-1958 அன்று விருதுநகரில், 204 பள்ளிகள் இணைந்து பள்ளிச் சீரமைப்பு மாநாட்டை ஏற்பாடு செய்தன. மாவட்டக் கல்வி அதிகாரி ஆர். பி. ருத்திரப்பசாமி சூத்திரதாரியாக இருந்தார். திரு. வி. வி. இராமசாமி, குழுவின் தலைவர்; திரு.எம். எஸ். பி. இராசா, துணைத்தலைவர். அது சாதனை மிகுந்த மாநாடு; ஆனால் வேதனைக்கு வித்திட்டு விட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/399&oldid=788197" இலிருந்து மீள்விக்கப்பட்டது