உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/400

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனிப் பயிற்சிப் படிப்பு - காமராசரின் திட்டம் 363 பல ஊர்களிலும் ஆசிரியர்களும் பொது மக்களும் கட்சி வேறுபாடின்றி என்னை ஆர்வத்தோடு வரவேற்றார்கள். "நான் ஊழியன்; எனக்கு அமைச்சர்களுக்கே உரிய மரியாதையைக் கொடுப்பது கூடாது” என்று எவ்வளவு சொல்லித் தடுத்தும் பலிக்கவில்லை. பல ஊர்களில் முதலமைச்சர் காமராசரும் கல்வி அமைச்சர் சுப்பிரமணியமும், தங்கள் பெருங்குணத்தால் என்னை அவர்களுக்கு ஈடாக வரவேற்கும் பழக்கத்தை.வளர்த்து விட்டார்கள், எனலாம். “எனது வரவேற்பிதழை முழுமையாகப் படிக்க வேண்டாம்; என்னிடம் கொடுத்துவிடுங்கள்” என்பேன். "படிக்கட்டும், படிக்கட்டும்” என்று இருவருமே தூண்டிய துண்டே ஒழிய, நிறுத்தியது இல்லை. நான் பேசப்போகும்போது, எத்தனை முறை இரு பெரியவர் களும், ‘விரிவாகவே பேசுங்கள் என்று என்னை ஊக்கப்படுத்தி இருக்கிறார்கள்! அவர்கள் இருவரும் என்னை ஊழியனாகக் கருதாது, அவர்கள் பெரும்பணியில் முதல் தொண்டனாக நடத்தினார்கள். அதனால், எனக்குக் கிடைத்த வரவேற்பு என் இயல்பிற்குத் தொல்லையாக அமைந்தது: விருதுநகரில், கோச் வண்டியில் என்னை அமர்த்தி, ஊர்ப் பெரியவர்கள் சிலரும் அமர்ந்துவர, ஊர்வலமாக அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்து விட்டார்கள். அது முன்கூட்டி எனக்குத் தெரியாது. என் ஒப்புதல் பெறாத தோடு மட்டும் அல்லாது, எனக்கும் ஊர்வலம் புறப்படுவதற்குச் சில மணித்துளிகள்வரை தெரிவிக்கவில்லை. அதை அறிந்ததும் கல்வி அலுவலர் திரு ருத்திரப்ப சாமியை அழைத்து, பெரியவர்கள் முன்னிலையில், கோச் வண்டி ஊர்வலமா? “காந்தியவாதியான் தாங்கள் கூட இப்படி ஆடம்பரப் பிரியராக மாறிவிட்டால், நான் யாரை நம்பி வருவது?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/400&oldid=788199" இலிருந்து மீள்விக்கப்பட்டது