பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/401

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

364 நினைவு அலைகள் "திருமணத்தின் போதுகூட ஊர்வலம் பார்க்காத எனக்கு, இப்படி ஒரு ஆடம்பரமான ஊர்வலம் ஏற்பாடு செய்ததை நீங்கள் தடுத்திருக்க வேண்டும். "இந்த ஏற்பாடு எனக்கும் நல்லதல்ல, இயக்ககத்திற்கும் நல்லதல்ல” என்று கடிந்து கொண்டேன். வி. வி. இராமசாமி அமைதிப்படுத்தின்ார். "சில மணித்துளிகள் பொறுத்திருந்துவிட்டு, வி.வி.இராமசாமி குறுக்கிட்டார். ஆசிரியர்கள் உங்கள்பால் கொண்டுள்ள அன்பால் இப்படி ஏற்பாடு செய்து விட்டார்கள் "அதைத் தடுத்தால், சீரமைப்புப் பணிகள் சுணங்கிப்போகுமே என்று அஞ்சி ஊர்வல ஏற்பாட்டினை ஏற்றுக்கொண்டோம். பொறுத்துக் கொள்ளுங்கள் “ஊர்வலத்திற்காகக் கூடியிருப்பவர்களைக் கலைந்து போகச் சொன்னால், அப்புறம் இப் பகுதி மக்கள் ஒன்றிற்கும் நமக்கு ஒத்துழைப்புத் தரமாட்டார்கள்” என்றார். வேறு வழியின்றி, ஊர்வலமாகச் சென்றேன். வழியில் பல இடங்களில் மாலை அணிவித்தார்கள். மாதாடு சிறப்பாக நடந்தது. 20 பள்ளிகளுக்காக,13:42,000 ரூபாய் மதிப்புள்ள திட்டங்களை ஏற்றுக் கொண்டார்கள். அவற்றில் 2,17,300 ரூபாய் மதிப்பிற்கு வேலைகள் நடந்துவிட்டன; பொருள்கள் சேர்ந்துவிட்டன. விருதுநகர்ப் பகுதி கல்வி வள்ளல்களை, எவ்வளவு போற்றினாலும் தகும். புயல் மையங் கொண்டது; காமராசரின் புகழைக் குறைக்காதீர்கள் விருதுநகரில் புயல் ஒன்று அவ் வமயம் மையங் கொண்டது, எனக்குத் தெரியாது. அப்பொழுது விருதுநகர், நகர்மன்றத் தலைவர் தேர்தல் நடப்பதாக இருந்தது. திரு. எம். எஸ். பி. இராசா போட்டியிட ஏற்பாடுகள் செய்திருந்தார். அவர் காங்கிரசு வேட்பாளர் ஒருவரை எதிர்த்துப் போட்டியிடக் கச்சை கட்டிக்கொண்டிருந்தார். அவர் பெயர் நினைவில் இல்லை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/401&oldid=788200" இலிருந்து மீள்விக்கப்பட்டது