பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/402

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனிப் பயிற்சிப் படிப்பு - காமராசரின் திட்டம் ,365 சில மணித்துளிகள், வி. வி. இராமசாமி, எம். எஸ். பி.இராசா நான் ஆகிய மூவரும் தனியே காரில் செல்ல நேர்ந்தது. அப்போது, "இராசா, நகரமன்றத் தலைவர் பதவிக்குப் போட்டியிடப் போகிறார். தாங்கள் வாழ்த்த வேண்டும்” என்றார். ‘பாட்டனார் செந்தில்குமார் நாடார் பதவி-தந்தை பெரியசாமி நாடார் பார்த்த பதவி - தம்பிக்கு வருவது மகிழ்ச்சி காங்கிரக சார்பில்தானே, நிற்கிறீர்கள்?’ என்று வினவினேன். “இல்லை; காங்கிரசுக்கு எதிராக” என்றார். "சட்டமன்றப் ப்ொதுத் தேர்தலில் முதலமைச்சர் காமராசருக்கு ஆதரவாக இருந்தீர்களாமே! அதற்குள் ஏன் மாற்றம்?” என்று கேட்டேன். - “மெய்தான். இப்போது, உள்ளுர்க்காரர்களுக்குள் போட்டி” என்றார், இராசா தொடர்ந்து, "நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று என்னைக் கேட்டார். உலகியல் தெரிந்திருந்தால், சும்மா நழுவியிருக்கலாம். பளிச் சென்று பதில் சொல்லிவிட்டேன். "நான் சொல்வதைத் தவறாக எடுத் துக் கொள்ளாதீர்கள். "அழுத்தி வைக்கப்பட்டிருந்த உங்கள் சமுதாயத்தில், இந்தியா முழுவதும் அடையாளம் கண்டு கொள்ளும் பெருந்தலைவர் இப்போதுதான் முதன்முறை தோன்றி இருக்கிறார். "அவர் தோல்விக்கோ, செல்வாக்கிற்கோ எந்தவிதக் குறையும் ஏற்பட நீங்கள் காரணமாயிருக்கக்கூடாது. “இப்போதைக்கு விருதுநகரில் காங்கிரசு தோற்று, நீங்கள் வென்றீர்கள் என்றால், அதனால் உங்களுக்கு வரும் பெருமையை விடப் பல மடங்கு குறை முதல்வருக்கும், உங்கள் சமுதாயத்திற்கும் வந்துசேரும்” என்றேன். "நீங்கள் எக் கட்சியிலும் சேராத முற்போக்காளர். உங்கள் சிந்தனை எனக்குப் புரிகிறது. மற்றவர் சிரிக்க இடம் கொடுக்க மாட்டேன். நான் போட்டியில் இருந்து விலகிக் கொள்கிறேன்.” என்றார். * அவர் அம் முறை அப்படியே செய்தார். இதை நான் முதல்வர் காமராசரிடம் சொல்லிக் கொள்ளவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/402&oldid=788201" இலிருந்து மீள்விக்கப்பட்டது