பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/403

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

366 40. வள்ளுவன் நினைவுச் சின்னம் - காமராசர் திறந்து வைத்தார். பகல் உணவுத் திட்டம் சீருடைத் திட்டம் விருதுநகர் பள்ளிச் சீரமைப்பு மாநாடு நடந்த பிறகு, அதுபற்றி முதலமைச்சர் என்னிடம் கேட்டார். சிறப்பாக நடந்ததைப் பற்றி மகிழ்ந்தார். சில நாள்கள் சென்றன. கல்வி அமைச்சர் "பகல் உணவுத் திட்டம், சீருடைத் திட்டம் ஆகியவை நடப்பது பற்றி விசாரித்து அறிக்கை கொடுக்க, ஒரு குழுவை அமைத்தால் என்ன? அது மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்டதாக இருக்கலாமென்று நினைக்கிறேன். உங்களுக்கு வேண்டிய அய்ந்து உறுப்பினர் பெயர்களைக் கொடுங்கள்” என்றார். “பகல் உணவுத் திட்டம் தொடங்கி, ஒராண்டே ஆகிறது: சீரமைப்புத் திட்டம் தொடங்கி, எட்டுத் திங்கள் ஆகிறது. எனினும் தொடக்கத்திலேயே ஒர் உயர்மட்டக்குழு, இவற்றின் நடை முறையைக் கவனித்து, அறிக்கை கொடுப்பது, குறைகளை வளரவிடாமல் தடுக்க உதவும்” என்றேன். பெயர்களை அனுப்பும்படி அமைச்சர் கட்டளையிட்டார். 'அய்யா மன்னியுங்கள். தங்கள் மதிப்பீட்டின் பேரில் எவரைப் போட்டாலும் சரிதான்” என்று பதில் கூறினேன். 5Péu நாள்களுக்குப் பிறகு, முதலமைச்சரே, குழுவின் உறுப்பினர்களுக்குப் பெயர்களைக் கேட்டார். “தயவுசெய்து தப்பாகக் கருதாதீர்கள், தங்கள் மதிப்பீட்டை விடச் சரியாக, என்னால் எடைபோட முடியாது. தாங்கள் எவரைச் சேர்த்தாலும் சரியே. "குழுவின் செயல் முறை பற்றி ஒரு யோசனை. குழுவின் செயல் முறை, கல்வித் துறையோடு, தொடர்புடையதாக இருக்க வேண்டாம். == “அந்தக் குழுவின் பயணத் திட்டம் கல்வித்துறை அலுவலர் களுக்குத் தெரிய வேண்டாம் மாவட்ட ஆட்சித் தலைவர்களோடு மட்டுமே, குழுவின் தொடர்பு இருக்கட்டும். அவர்கள் தணிக்கை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/403&oldid=788202" இலிருந்து மீள்விக்கப்பட்டது