பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/404

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவன் நினைவுச் சின்னம் - காமராசர் திறந்து வைத்தார் 367 இரகசியமாக இருந்தால், உண்மை முழுமையாகப் புலப்படும்” என்றேன். குழு அமைப்பதில், விரைவு காட்டவில்லை; அது கிணற்றில் போட்ட கல் இல்லை. சில திங்களுக்குப் பின் குழு அறிவிக்கப்பட்டது. அப்போதைய தமிழ்நாடு காங்கிரசுக் குழுவின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான, திரு. கிருஷ்ணசாமி நாயுடு, காங்கிரசு சட்டமன்ற உறுப்பினர் கொங்கணபுரம் கே. எஸ் சுப்பிரமணியக் கவுண்டர், சுயேச்சை உறுப்பினர் திரு சட்டநாதக் கரையாளர் ஆகிய மூவர் குழுவின் உறுப்பினர்கள் ஆவர். அக் குழு, பல திங்கள் பயணம் செய்தது. பல ஊர்களுக்குச் சென்றது. இன்ன புகைவண்டி நிலையத்தில், இன்ன வண்டியில் வருகிறோம். உரிய அலுவலர் அங்கு வந்து எங்களைக் காண ஆணையிடுங்கள் என்று மாவட்ட ஆட்சித் தலைவருக்குத் தகவல் கொடுப்பார்கள். மதுரையில் இறங்கினால், மேலுாருக்கோ, விருதுநகருக்கோ, விரைந்து சென்று பார்வையிடுவார்கள். திண்டுக்கல்லில் இறங்கினால், நத்தம் பக்கம் போவார்களா, பழனிப் பக்கம் போவார்களா, கம்பம் பக்கம் செல்வார்களா இல்லை மனப்பாறை சாலையில் விரைவார்களா என்று சொல்ல (LDLo-LLJIT35/. இப்படி முன்னறிவிப்பின்றி, திடீரென 565 மையங்களைப் பார்வையிட்டது அக் குழு. பகல் உணவுக் கணக்குகளைத் தணிக்கை செய்தது. பள்ளிச் சீரமைப்பு மாநாடுகளில் கிடைத்த நன்கொடைப் பொருள்களைச் சோதித்துப் பார்த்தது; பொய் புரட்டு ஏதும் காணவில்லை. பொருள்கள் இருந்தன. கடைகளில் சாதாரணமாகக் கொடுக்கும். விலைக்குக் குறைவாக மதிப்புப் போட்டு இருக்கக் கண்டது, அக்குழு. ஊரார் நன்கொடைகளின் மதிப்பை மிகைப் படுத்தவில்லை. பகல் உணவுத் திட்டத்திலும் ւու-6 ஏதும் தென்படவில்லை. எத்துணைப் பொறுப்போடு, ஆசிரியர்களும் பகல் உணவுக் குழுவிற்குச் செயல்பட்டார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/404&oldid=788203" இலிருந்து மீள்விக்கப்பட்டது