உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/405

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

358 நினைவு அலைகள் . அந்தச் சீலம் திரும்பி வருமா? அந்தச் சமுதாய நலவுணர்வு மீண்டும் வருமா? 22-11-1958 அன்று பிற்பகல், செங்கற்பட்டு நகரில் 826 பள்ளிகளின் சார்பில் நடந்த பள்ளிச் சீரமைப்பு மாநாட்டில், 23 இலட்சம் ரூபாய்களுக்குத் திட்டங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. உள்துறை அமைச்சர் வருகை அவற்றில் 1427 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள திட்டங்கள் மாநாடு கூடுவதற்கு முன்பே நிறைவேறி விட்டன. இம் மாநாட்டிற்கு, இந்திய அரசின் உள்துறை அமைச்சர் மாண்புமிகு கே. சி. பந்த் வருகை புரிந்தார். சென்னை மாநில உள்துறை அமைச்சர் மாண்புமிகு மீ. பக்தவத்சலம் பங்கு கொண்டு சிறப்பித்தார். செங்கற்பட்டு நகர் மன்றத் தலைவர், திருமதி இராசேசுவரி வேதாசலம் அம்மையார், வரவேற்புக் குழுத் தலைவராக விளங்கிச் சிறப்பாக நடத்தித் தந்தார். சி. சுப்பிரமணியத்தின் பாராட்டு அம் மாநாட்டின்போது, அவ்விரு அமைச்சர்களோடு, நான் சில மணித்துளிகள். தனியாக இருக்க நேர்ந்தது. அப்போது இந்திய அமைச்சர், பந்த், 'பக்தவத்சலம் ஜி! இயக்குநர்ைப் பற்றிக் கல்வி அமைச்சர் என்னிடம் கூறியதை நீங்களே சொல்லிவிடுங்கள்” என்றார். நம் அமைச்சர் என்ன கூறினார்? "பிற மாநிலங்களில் முளைக்காத, நல்ல மேம்பாட்டுத் திட்டங்கள், சென்னை மாகாணத்தில் மட்டும், பயிராவது வியப்பானது என்று உள்துறை அமைச்சர் சி. சு. விடம் கூறினார். “ன்ங்கள் பொதுக்கல்வி இயக்குநர், கல்லூரி மாணவப் பருவம் முதல், தேசியவாதிகளாகிய எங்கள்ோடேயே இருந்தவர்; எங்கள் உணர்வுகளைப் பெற்றவர். “விடுதலைப் போராட்டத்தில் நேரிடையாக ஈடுபடவில்லை என்பதைத் தவிர, மற்றபடி நம்மிலே ஒருவர் எங்களோடு சேர்ந்த பின், கதர் அணிதல் போன்ற காந்தியத் திட்டத்தில் ஈடுபட்டவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/405&oldid=788204" இலிருந்து மீள்விக்கப்பட்டது