உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/406

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Sir Gautir íslensorolë fleirearth - zmningi filmËğı sosušğini 369 "இளமையில் இருந்த அதே நாட்டுப் பற்றோடு - சமுதாய நலக் கண்டோட்டத்தோடு - இன்றும் முழுமையாகப் பாடுபடுகிறவர், எங்கள் இயக்குநர். "நேர்மையாளரான அவர், நல்ல பேச்சாற்றல் உடையவர்; "மக்களிடம் இனிமையாகப் பழகுபவர். "அவர் பால், பொது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு அடையாளங்களாகவே, புதிய திட்டங்களுக்குக் கிடைக்கும் ஆதரவு உள்ளது, என்று கல்வி அமைச்சர் கூறினார்” என்று திரு. பக்தவத்சலம் வெளிப்படுத்தினார். இத்தகைய பாராட்டு, எனது நன்மைக்கு வித்தாகவில்லை அழுக்காறு வளர்ந்தது. 'நீங்கள் தொடர்ந்து வெற்றிபெற வாழ்த்துகிறேன்” என்று மாண்புமிகு பந்த் வாழ்த்தினார். செங்கற்பட்டு மாநாட்டில், திரு. அளகேசனும் கலந்து கொண்டார். பிரதமர் மாநாட்டில் தில்லி திரும்பிய உள்துறை அமைச்சர் பந்த் இதுபற்றி, பிரதமர் நேருவிற்குத் தகவல் கொடுத்தார். சில திங்கள் ஓடின. பிரதமர் நேரு, சென்னை மாநிலத்திற்கு 1959 ஏப்ரலில் ஒருகை புரிய இருப்பதாகவும் அப்போது பள்ளிச் சீரமைப்பு மாநாடு ஒன்றைப் பார்க்க விரும்புவதாகவும் கடிதம் வந்தது. இதற்கிடையில், மாகாணத்தின் பல பகுதிகளில், பள்ளிச் சீரமைப்பு மாநாடுகள் நடத்த முன்னேற்பாடுகள் நடந்து கொண்டு இருந்தன. காரைக்குடிப் பகுதி பள்ளிகளுக்காக, தவத்திரு குன்றக்குடி அடிகளார். அத்தகைய ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார் நிர்வாகிகள், தலைமையாசிரியர்கள் ஆகியோரை அழைத்துப் பேசி, வழக்கமான சர்வே, நன்கொடைகளைப் பெறுதல் முதலிய ஏற்பாடுகளைச் செய்து வந்தார். தாராளமான உதவி கிடைக்கும் என்று தென்பட்டது. “முதலமைச்சர் வசதிப்படி நடத்தலாம். அவரை அழைத்து வாருங்கள்” என்று எனக்குச் செய்தி அனுப்பினார். o

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/406&oldid=788205" இலிருந்து மீள்விக்கப்பட்டது