பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/407

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

370 - நினைவு அலைகள் நானும் அழைப்பை நேரில் கொடுக்கக் காத்திருந்தேன். அப்படியிருக்கையில், முதலமைச்சர் என்னைக் கூப்பிட்டு அனுப்பினார். பிரதமர் வருகை பற்றிக் கூறினார். அவர் வரும்போது. இராமநாதபுரம் திருநெல்வேலி மாவட்டங்களில் ஏதாவது பள்ளிச் சீரமைப்பு மாநாடு நடத்த முடியுமாவென்று கேட்டார். “இராமநாதபுரம் மாவட்டத்தில் காரைக்குடியிலும் திருநெல்வேலியில் அடைக்கலாபுரத்திலும் பள்ளிச் சீரமைப்பு மாநாடுகள் ஏற்பாடு செய்து வருகிறார்கள். 'தயவுசெய்து இரண்டையும் காண ஏற்பாடு செய்யுங்கள்” என்று வேண்டிக் கொண்டேன். r முதலமைச்சர் ஒப்புக் கொண்டார். அடைக்கலாபுரம் என்பது திருச்செந்துாருக்கு அருகில் உள்ளது. அப் பகுதியிலும் பள்ளிச் சீரமைப்பு மாநாட்டினை, நிர்வாகிகளும் ஆசிரியர்களும் ஆய்வாளரும் கல்வி அலுவலரும் ஏற்பாடு செய்து கொண்டு இருந்தார்கள். அவர்களும் முதலமைச்சரை அழைக்கும் பொறுப்பை என்னிடம் விட்டிருந்தார்கள். பிரதமரே வருவாரென்றால், மகிழ்ச்சிக்கு எல்லையேது? சிக்கலை நீக்கினேன் மதுரை மண்டல ஆய்வாளர் வழியாக, இருவருக்கும் தகவல் கொடுத்தேன். காரைக்குடிப் பகுதியில் சிறு சிக்கல். அமைச்சர் பக்தவத்சலனார், என்னை வரச் சொன்னார். அவரைக் கண்டேன். “கருமுத்து தியாகராச செட்டியார் தம் ஊராகிய, ஆ. தெக்கூரில், பெரிய உயர்நிலைப் பள்ளிக் கட்டடத்தைக் கட்டி முடித்துள்ளார். பிரதமர் நேரு வரும்போது, அவரைக் கொண்டு புதிய கட்டடத்தைத் திறந்து வைக்க விரும்புகிறார்.

  • "குன்றக்குடி அடிகளார் ஏற்பாடு செய்து கொண்டிருக்கும் பள்ளிச் சீரமைப்பு மாநாட்டைக் காரைக்குடியிலோ, குன்றக் குடியிலோ நடத்தாமல், ஆ. தெக்கூருக்கு மாற்றி விட்டால் இரண்டிலும் பிரதமர் பங்கு கொள்ளும்படி ஏற்பாடு செய்து விடலாம்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/407&oldid=788206" இலிருந்து மீள்விக்கப்பட்டது