உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/408

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவன் நினைவுச் சின்னம் - காமராசர் திறந்து வைத்தார் 371 “அப்படி மாற்றுவதனால், அடிகளாருக்குப் பதில், தியாகராசச் செட்டியாரே, வரவேற்புக் குழுத் தலைவராக இருப்பதே, பொருத்தமாயிருக்கும். அப்படி மாற்றலாமா என்று பார்த்து, விரைவில் என்னிடம் தெரிவியுங்கள்” என்றார். இதைக், கல்வி அமைச்சருக்குத் தெரிவித்துவிட்டு, செயல் படத் தொடங்கினேன். அடிகளாரின் பெருந்தன்மை தவத்திரு அடிகளார், வெளிச்சம் போடுவதற்காகக் கல்வித் தொண்டிலோ, சமுதாயத் தொண்டிலோ, தமிழ்த் தொண்டிலோ ஈடுபட்டுள்ளவர் அல்லர். எனவே, வினாடியும் தாமதிக்காமல், மாற்று யோசனையை ஏற்றார். தாமே, வரவேற்புக் குழுத் கூட்டத்தைக் கூட்டினார். மாநாட்டை, ஆ. தெக்கூரில் நடத்தலாம் என்றும், கருமுத்து தியாகராச செட்டியாரை வரவேற்புக் குழுத் தலைவராக இருக்கும் படி அழைக்கலாம் என்றும் முன் மொழிந்தார். குழு அவற்றை ஒப்புக்கொண்டது. அக் குழுவின் துணைத்தலைவராக அடிகளார் இறங்கி, மாநாட்டு வேலைகளைக் கவனித்தார். அதைச் சிறப்பாக நடத்தித் தந்தார். பிரதமர் நேரு வருகிறார் என்பதால், ஆ. தெக்கூர் பள்ளிச் சீரமைப்பு மாநாடு, காரைக்குடிப் பகுதியோடு நிற்காமல் பிற் பகுதிகளையும் சேர்த்துக் கொண்டு விரிவாக நடத்தப்பட்டது. 15-1-1959 அன்று முற்பகல் நடந்த அம் மாநாட்டில், 237 பள்ளிகள் பங்கு கொண்டன. திட்டங்களில் மொத்த மதிப்பீடு, 13:26,954 ரூபாய்கள் ஆகும். மாநாட்டிற்குள் நிறைவேறியவை 3,83,665 ரூபாய்கள் மதிப்புள்ளவை. மாநாட்டிற்கு முன்பு ஒரு திங்களில் அப் பகுதிக்கு, இரண்டு மூன்று முறை சென்றேன். சிறு சிறு கூறுகளையும் கவனித்தேன். உரியவாகளோடு கலந்து செம்மைப் படுத்தினேன். எல்லாத் தரப்பினரின் ஒத்துழைப்பையும் பெற்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/408&oldid=788207" இலிருந்து மீள்விக்கப்பட்டது