பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/409

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

372 நினைவு அலைகள் மண்ட்ல ஆய்வாளர் திரு. முகமது கனி, மாவட்டக் கல்வி அலுவலர் திரு. பி. எஸ். எபனேசர், ஆய்வாளர்கள் ஆகியோர் அல்லும் பகலும் பாடுபட்டார்கள். திரு. கருமுத்து தியாகராச செட்டியார் குடும்பத்தின் ஆதரவில் ஆ. தெக்கூரில் உயர்நிலைப் பள்ளியும், மதுரையில் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியும், கலைக் கல்லூரியும் திருப்பரங்குன்றத்தில் பொறியியற் கல்லூரியும் நடத்தப்பட்டன அவற்றில் பொறியியற் கல்லூரி தொடங்கியபோது, நான் அவருக்கு ஒரளவு உதவி செய்தேன். அப்போது பொதுக்கல்வி இயக்குநரிடமே பொறியியற் கல்வியுமிருந்தது. இரண்டாவது அய்ந்தாண்டுத் திட்டத்தில் சென்னை மாநிலத்தில் புதியதோர் பொறியியற் கல்லூரி தொடங்க முடிவு செய்ததைக் கேள்விப்பட்ட செட்டியார், என்னோடு தொடர்பு கொண்டார். தான் பொறியியற் கல்லூரி தொடங்க ஆயத்தமாயிருப் பதாகவும் போதிய நிதிவசதி கையிருப்பில் இருப்பதாகவும் கல்வி அமைச்சரிடம் அது பற்றிப் பேசி ஆணை பெற்றுத் தரும்படியும் வேண்டினார். அவ்ரே அமைச்சரை அணுகலாம் என்று ஆலோசனை கூறினேன். முதலில் இயக்குநர் தூது சென்றால், தான் நேரில் காண்பதாகக் கூறினார். கல்வி அமைச்சரிடம் நான் அது பற்றிப் பேசினேன். அவர் இசைந்தார். பின்னர், செட்டியார் அமைச்சரை அணுகினார். பொறியியற் கல்லூரி தொடங்க அவருக்கு ஆனை கிடைத்தது. ஆ. தெக்கூர் மாநாடு, குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கியது நன்கொடைப் பொருள்கள் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தன. மக்கள் வெள்ளம் திரண்டிருந்தது. பிரதமர் நேரு, முதலமைச்சர் காமராசர், கல்வி அமைச்சர் சி.சுப்பிரமணியம், செட்டிநாட்டு அரசர் டாக்டர் எம்.ஏ. முத்தையா செட்டியார், சி. வி. சி. டி. வெங்கடாசலம் செட்டியார் முதலியோர் கலந்துகொள்ள அந்த மாநாடு சிறப்பாக நடந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/409&oldid=788208" இலிருந்து மீள்விக்கப்பட்டது