பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/410

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவன் நினைவுச் சின்னம் - காமராசர் திறந்து வைத்தார் 373 பிரதமரின் பேச்சை மொழிபெயர்த்தேன் பிரதமர் நேருவின் ஆங்கிலச் சொற்பொழிவை உடனுக்குடன் சொற்றொடருக்குச் சொற்றொடர் மொழிபெயர்க்கும் பேறு எனக்குக் கிட்டியது. அதைச் சிறப்பாகச் செய்ததாகக் கல்வி அமைச்சர் என்னைப் பாராட்டினார் அந்த மாநாட்டிற்கு, முன்னதாகவே என் மனைவி காந்தம் மாவும் என் மகன் திருவள்ளுவனும் வந்திருந்து, அமைப்பு முறைகளுக்கு ஆலோசனை கூறி உதவினார்கள். மாநாட்டின்போது, இருவரும், மேடைக்கு நேரே, பாதுகாப்பு' வரம்பிற்கு அப்பால், கீழே அமர்ந்திருந்தார்கள். நான், மாநாட்டு அறிக்கையைப் படித்துக் கொண்டிருக் கையில், பிரதமர் நேரு, எதிரிலிருந்த திருவள்ளுவனைக் கண்டு விட்டார். அவன் அவர் கருத்தைக் கவர்ந்துவிட்டான். அவர் அழைக்க, அவன் மேடைக்கு வந்து, நேருவுக்கும் சி. சுப்பிரமணியத்திற்கும் நடுவே நின்று கொண்டான். அக் காட்சியைப் பல புகைப்படக்காரர்கள் படம் பிடித்து விட்டார்கள். அவன் மேடைக்கு வந்ததை நான் முதலில் கவனிக்கவில்லை. வந்து நின்ற பிறகே கவனித்தேன். அவன் அமைதியாகவே நின்றுகொண்டிருந்தான். ஆனால், என் கை கால்கள் நடுங்கின. ‘என் மகனுக்கு விளம்பரம் தேடிக் கொண்டதாக உலகம் பழிக்குமே? என்பது எனது கவலை! 'அவனாக, மேடைக்கு வந்திருப்பானோ?” என்று அய்யப் பட்டேன். மாநாடு முடிந்த பிறகே, நடந்தது தெரிந்தது. அதுவரை நெருப்பின்மேல் உட்கார்ந்திருப்பது போன்ற உணர்வால் துடித்தேன். மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய நேரத்தில் இப்படி ஒரு குறுக்கீடு; இது என் தொடர்கதை. ஆ. தெக்கூர் மாநாடு எவ்விதக் குறைபாடும் இல்லாமல் நடந்தது. ஆயிரக்கணக்கானவர்கள் விருந்துண்டபின் கலைந்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/410&oldid=788210" இலிருந்து மீள்விக்கப்பட்டது