பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/411

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

374 நினைவு அல்ைகள் மாநாட்டின் சிறப்புக்கு அனைவருமே காரணம் என்றாலும் மாவட்டக் கல்வி அலுவலர் திரு எபனேசரும், மண்டல ஆய்வாளர் திரு. முகமதுகனியும் பெரிதும் காரணமானவர்கள். அடிகளாரின் தொண்டு சிறப்புக்குரியது. - அடுத்த நாள் மாலை, அடைக்கலாபுரத்தில் பள்ளிச் சீரமைப்பு மாநாடு. அதையும் பிரதமர் நேரு தொடங்கி வைத்தார். முந்தியதைப் போன்றே, இந்த மாநாடும் சிறுக முளைத்து, பிரதமரின் வருகை பற்றிப் பெரிதாக்கப்பட்டது. முதலில் உடன்குடிப் பகுதிப் பள்ளிகளுக்காக சீரமைப்பு மாநாடு நடத்துவதென்று ஏற்பாடு செய்தார்கள். அதற்காக ஒரு குழு அமைத்தார்கள். குலசேகரன்பட்டினம் ஆசிரியர் மையச் செயலர், திரு. வெங்கடாசல அய்யங்கார் குழுவின் செயலாளராக நியமிக்கப்பட்டார். மற்றவர்கள் அவரோடு முழுமையாக ஒத்துழைப்புத் தந்தார்கள். எல்லாப் பிரிவினரும் ஆர்வத்தோடு ஈடுபட்டனர். முதலமைச்சரையோ, கல்வி அமைச்சரையோ அழைத்து அவரைக் கொண்டு நடத்துவதே முதலில் போட்ட திட்டம். மாநாட்டிற்கு எவர் தலைமை தாங்குவது என்ற கேள்வி எழுந்தது. ஆசிரியர்களில் ஒருவர் தலைமை வகிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. குலசேக்ரன்பட்டினம் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு. கணபதியைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தார்கள். பிரதமர் நேரு வந்து கலந்துகொள்ளும் வாய்ப்பு வலிய வந்ததால், அடைக்கலாபுரம் மாநாடும் பெரிய அளவில் நடத்த ஏற்பாடுகள் நடைபெற்றன! அதில் திருநெல்வேலி கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த 177 பள்ளிகள் பங்கு கொண்டன. 12,12,000 ரூபாய் மதிப்புள்ள திட்டங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அவற்றில் 10,67281 ரூபாய் மதிப்புள்ளவை, மாநாட்டின்போதே நிறைவேறி விட்டன. இம் மாநாட்டில் பங்கு கொண்ட, ஒவ்வொரு பள்ளிக்கும் வார்தா கழிவறை இரண்டு நன்கொடையாகக் கொடுத்தது குறிப்பிடத்தக்க செய்தி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/411&oldid=788211" இலிருந்து மீள்விக்கப்பட்டது