பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/412

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

susir Gibsu: flamentojë fshrewruh = *Tunistrai filmstigil sosušiğini 375 திறந்த வெளியில் கழிக்கும் தீயபழக்கத்தை ஒழிக்க அப்படியொரு ஏற்பாடு செய்தார்கள். அது பரவி இருந்தால், துப்புரவு பெருகியிருக்கும். இம் மாநாடும், பல்லாயிரவர் திரள, அமைதியாகவும் சிறப்பாகவும் நடந்தது. ஆ. தெக்கூரில் அடைந்த அதே பரவசத்தைப் பிரதமர் நேரு, அடைக்கலாபுரத்திலும் பெற்றார். இரு இடங்களிலும் பள்ளிகளுக்குத் தேவையான பொருள் களில் கொலு அடுக்குகள் மக்களைக் கவர்ந்தன. அதற்குப் பின்னால் ஒளியிட்ட உணர்வு கருத்தைக் கவர்ந்தது. பள்ளிகளின் சீரமைப்பிற்கும் சமுதாய மறுமலர்ச்சிக்கும் பொதுமக்கள் பொறுப்பேற்கும் உணர்வு தேவையானது; விலை மதிப்பு இல்லாதது; வளர்க்க வேண்டியதும் ஆகும் அடைக்கலாபுரம் மாநாட்டின் வெற்றிக்கு, நூற்றுக்கணக்கான நிர்வாகிகளும் பல நூறு ஆசிரியர்களும் பதினாயிரக் கணக்கான நன்கொடையாளரும் காரணமாவார்கள். மண்டல ஆய்வாளர் முகமதுகளிை, ஆ. தெக்கூர் மாநாட்டை வழி நடத்தியது போன்றே இம் மாநாட்டையும் வழி நடத்தினார். அங்கே எபனேசர், பொறுமையாகவும் செம்மையாகவும் செயல்பட்டது போன்று, இங்கே, கே. வெங்கடசுப்பிரமணியம் செயல்பட்டு வெற்றி கண்டார். மறைத்திரு லோபோ என்னும் ரோமன் கத்தோலிக்க சாமியாருக்கு இம் மாநாடு பெரிதும் கடமைப்பட்டுள்ளது. மறைத்திரு. லோபோ அடிகளார். பகல் உணவுத் திட்டத்திற்காக, தம் கண்காணிப்பில் உள்ள ஊர்களின் களத்துமேட்டிற்குச் சென்று, நெல்லைத் திரட்டி வருவது பழக்கம். எனவே, அவருக்குக் களத்துமேட்டுச் சாமியார் என்றே பெயர் சூட்டிவிட்டார்கள். இம் மாநாட்டின் போதும் காந்தம்மாவும் திருவள்ளுவனும் எனக்குப் பக்கத் துணையாக நின்று ஊக்கப்படுத்தினார்கள். முன்னாள் பிற்பகல், ஆ. தெக்கூரில் புறப்பட்டு, சாலை வழியாகவே, திருச்செந்தூர் வந்து சேர்ந்தோம்; சோர்வு படாது, மறுநாள் காலை மாநாட்டின் முன்னேற்பாடுகளுக்காவும் நான் இருமுறை அங்குச் சென்று ஊக்குவிக்க நேரிட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/412&oldid=788212" இலிருந்து மீள்விக்கப்பட்டது