பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/413

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

376 நினைவு அலைகள் இந்தியாவின் கவனத்தை ஈர்த்தது பிரதமர் நேரு, பள்ளிச் சீரமைப்பு மாநாடுகள் இரண்டைக் கண்டு, மக்கள் மனப்போக்கை உணர்ந்து, அதைப் பாராட்டிப் பேசியது, நாடு தழுவிய கவனத்தை இவற்றின்பால் திருப்பின். சென்னை மாநிலம், மக்களைக் கொண்டே பகல் உணவுத் திட்டத்தை நடத்துவதையும் பள்ளிச் சீரமைப்பு இயக்கத்தை வளர்ப்பதையும் பாராட்டி, அவ் வழியில் செயல்படுமாறு பிரதமர் நேரு, பிற மாநில முதலமைச்சர்களுக்கு நேர்முகக் கடிதம் எழுதினார். இப் புதுமைகள் பற்றி அவ்வப்போது பேசி வந்தார். எனவே, இந்திய அரசின் செய்தி தகவல்துறை, இவ் விரு. திட்டங்கள் நடக்கும் இடங்களுக்குச் சென்று, செய்திப் படங்கள் தயாரித்தது. பிரதமர் நேரு கலந்து கொண்ட ஆ. தெக்கூர், அடைக்கலாபுரக் காட்சிகள் திரைப்பட அரங்குகளில் செய்திச் சுருளாகக் காட்டுவதற்கு இந்திய அரசு ஏற்பாடு செய்தது. அதைப் பார்த்துவிட்டு வந்த நண்பர் ஒருவர் என்னிடம் கூறி, போய்ப் பார்க்கச் சொன்ன்ார். அதைத் திருவள்ளுவன் கேட்டுக் கொண்டிருந்தான். சினிமாவுக்குப் போகாதே "அப்பா! நீங்கள் மாணாக்கர்களைச் சினிமாவுக்குப்போக வேண்டாமென்று சொல்லுகிறீர்கள். நீங்களே சினிமாவுக்கு போனால், உங்கள் சொல்லை யார் மதிப்பார்கள்? நீங்கள் போக வேண்டாம்” என்றான். அவன் முடிவுக்குக் கட்டுப்பட்டேன். எதையும் தன்னலத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளத் தெரியாத என்னைப் பற்றி, ஒகோவென்று புகழ்ஒளி வீசுகையில், பேரிடி ஒன்று. வீழ்ந்தது. பேரிடி விழுந்தது எங்கள் குலவிளக்கு அணைந்தது. ஒரே மைந்தன் அறிவுச் சுடர் - பண்பின் சுரங்கம் - பரிவின் ஊற்று - குணக்குன்று சுறுசுறுப்பின் திருவுருவம் - பண்பாட்டின், கலங்கரை விளக்கு. எங்கள் நம்பிக்கையின் பெருமலை - பாலகுரு - கா. சு.திருவள்ளுவன் மறைந்தான். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/413&oldid=788213" இலிருந்து மீள்விக்கப்பட்டது