பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/414

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

susir Gsusir filemsorolë fleirearth - ainuormai filmjög sosušģinti 377 . திடீர்க் காய்ச்சல் 1959 செப்டம்பர் ஆறாம் நாள் நள்ளிரவுக்குப்பின் காய்ச்சல் வந்தது. காந்தம்மாவை எழுப்பிக் கூறினான். அப்போதைக்கு ஏதோ மாத்திரையைக் கொடுத்தார். பொழுது விடியவும், எங்கள் குடும்ப மருத்துவர் டாக்டர் பி. அனுமந்தராவுக்குக் கார் போயிற்று. அவர் வந்து பார்த்து மருந்து கொடுத்துவிட்டுப் போனார். மாலை மறுபடியும் வந்தார். அவன் குருதியை எடுத்துச் சோதனைக்கு அனுப்பினார். மறுநாள் காலை வந்தார். காய்ச்சல் குறையவில்லை. மருத்துவமனையில் சேர்க்கும்படி சொன்னார். அவ்வேளை நான் எட்டு மணிக்கே அலுவலகம் சென்று விட்டேன். அன்றுதான், கன்னியாகுமரி மாவட்ட ஆசிரியர்களை இணைப்பது பற்றிக் கோட்டையில் பேச்சு நடந்தது. அதற்குச் சென்றுவிட்டு, அது முடிந்ததும் பகல் ஒரு மணியளவில் நேரே இல்லத்திற்குத் திரும்பினேன். டாக்டரைத் தேடினோம் திருவள்ளுவனுக்குக் காய்ச்சல் அதிகமாகவே இருந்தது. இதற்கிடையில் அண்ணன் குத்துாசி குருசாமியார் பொது மருத்துவமனையில் தமக்கு வேண்டிய பெரிய டாக்டர் ஒருவரோடு தொடர்பு கொள்ளப் பல முறை முயன்றார். இயலவில்லை. எனவே, இருவரும் அவரைத் தேடிச் சென்றோம். மருத்துவ மனையில், வீட்டிற்குச் சென்று விட்டதாகக் கூறினார்கள். வீட்டிற்குச் சென்றோம். வடசென்னை சென்று இருப்பதாகக் கூறினார்கள். அங்கும் சென்றோம். கண்டு பிடிக்க முடியவில்லை. இறுதியில் திருவொற்றி யூரில் கண்டு பிடித்தோம். அவர் ஆணைப்படி திருவள்ளுவனை டாக்டர் சுந்தர்வதனம் நர்சிங் ஹோமில் சேர்த்தோம் . - டாக்டர் விரைந்து வந்தார்; சோதித்தார். முதுகெலும்பில் குத்தி நீர் எடுக்க ஏற்பாடு செய்யும்படி கீட்டளையிட்டார். மீளா உறக்கம் அவர் மேற்பார்வையில் அம் மருத்துவத்திற்கு ஏற்பாடு செய்து கொண்டிருக்கையிலேயே, திருவள்ளுவன், மீளா உறக்கத்தில் ஆழ்ந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/414&oldid=788214" இலிருந்து மீள்விக்கப்பட்டது