பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/415

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

378 நினைவு அலைகள் செய்தியைக் கேட்டு, காந்தம்மா கதறினார் நான் சிலையாகி விட்டேன். டாக்டர் எம். டி. பால், மற்றும் சில அலுவலர்கள், அந் நேரம் பார்த்துத் தற்செயலாக அங்கு வந்து சேர்ந்தார்கள். டாக்டர் பாலின் காரில் திருவள்ளுவனின் உடலை, வீடு கொண்டு வந்தோம். முதலில் விரைந்தோடி வந்தவர், என் எதிர் வீட்டுக்காரராகிய திரு. சிவானந்தம் ஆவார். அவருடைய ஒரே மகன் சேகரும் திருவள்ளுவனும் மிக நெருங்கிய நண்பர்கள். அவருடைய குடும்பமும் எனது குடும்பமும் அண்ணன் தம்பி வீட்டார் போல் பழகுவோம். இருவரும் அடிக்கடி உணவுகளைப் பரிமாறிக் கொள்வோம். அந்த இனிய குடும்பமே வந்தது: திருவள்ளுவன் மறைவு பற்றி, நாள் இதழ்களுக்குச் செய்திகள் போயின. பெரியாருக்குத் தந்தி போயிற்று. இரவு நெடுநேரம் வரையில் உள்ளூர் நண்பர்கள் வந்து, எங்கள் துயரத்தில் பங்கு கொண்டார்கள். அடுத்த நாள் அதிகாலையில் இருந்து சாரை சாரையாக, அன்பர்கள் வந்து துக்கம் விசாரித்தபடி இருந்தார்கள். அது சோகக் கதையின் தொடக்கம் என்பது கனவில்கூட மின்னவில்லையே. ஆளுநர் விஷ்ணுராம் மேதி உடனே தனி அலுவலர் வழி, இரங்கல் கடிதம் அனுப்பி வைத்தார். காமராசர் ஆறுதல் கூறினார் முதலமைச்சர் காமராசர், வந்து-கண்டு, ஆறுதல் கூறினார். பக்தவத்சலனார் வந்து விசாரித்தார். திருவள்ளுவன்.பிள்ளைப் பேற்றின்போது மருத்துவம் பார்த்த டாக்டர் ஆ. இலட்சுமண சுவாமி முதலியார் நேரில் வந்து ஆறுதல் கூறினார். வெளியூரில் இருந்த சி.சுப்பிரமணியம் அடுத்தநாள் காலை குடும்பத்தோடு வந்து துக்கம் விசாரித்தார் தொலைவில் இருந்த தந்தை பெரியார், செய்தி கேட்டதும் புறப்பட்டு, இரவோடு இரவாகப் பயணம் செய்து,'9-9-1959 காலை 1 மணிஅளவில் என் இல்லம் வந்து சேர்ந்தார். எதற்கும் கலங்காத பெரியார், கண்ணிர் விட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/415&oldid=788215" இலிருந்து மீள்விக்கப்பட்டது