பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/421

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

seeinrennunenso usiososvë sipa, unirswatsui sensurgpuh selgisir விளைவுகளும் 383 "நீங்கள் சம்மதம் தெரிவித்தால், மறுதாரம் செய்துகொள்ள, காந்தம்மாவின் ஒப்புதலை, குஞ்சிதம் அம்மாளைக் கொண்டு பெற்றுத்தர ஏற்பாடு செய்கிறேன்” என்றார் அர்ச்சுனன். இவர் பெரியாரின் முதல் அணியைச் சேர்ந்தவர். இரணியன் அல்ல்து இணையற்ற வீரன்’ என்ற பாரதிதாசன் நாடகத்தில் நடித்தவர். குத்துாசியாருக்கு வேண்டியவர்; எனவே, உரிமை கொண்டாடினார். எனினும், எனக்குச் சினங் கொப்பளித்தது. அடக்கிக் கொண்டு இருந்தேன். "யோசித்துப் பாருங்கள். அப்புறம் வருகிறேன்” என்று சொன்னார். மீண்டும் இருமுறை வந்து நினைவு படுத்தினார். எல்லாப் போதும் ஊமையாகவே இருந்தேன். அப்புறம் அது பற்றி அர்ச்சுனன் பேசவில்லை. 41. அண்ணாமலை பல்கலைக் கழக மாணவர் கலவரமும் அதன் விளைவுகளும் டாக்டர் பி:திருஞானசம்பந்தம் ■ நெடுந்துாரம் வந்துவிட்டோம். சற்றுப் பின்நோக்கிப் பார்ப்போம். 1958 ஆம் ஆண்டு மார்ச்சு திங்கள் 6 ஆம் நாள் என்று நினைவு. கல்வி அமைச்சர் சி. சுப்பிரமணியம், அண்ணாமலை பல்கலைக் கழகத்தைப் பார்வையிடச் சென்றார். அவரை அழைத்த இணைவேந்தர் டாக்டர். இராசா சர் முத்தைய செட்டியார், என்னையும் உடன் வரும்படி அழைத்தார். எனவே, அமைச்சருடன் நானும் சென்றேன். முற்பகல் முழுவதும் கல்வி அமைச்சர் பல துறைகளைப் பார்வையிட்டார். பெளதிகம் என்னும்: இயற்பியல் துறையில் நெடுநேரம் செலவிட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/421&oldid=788222" இலிருந்து மீள்விக்கப்பட்டது