உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/422

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

384 நினைவு அலைகள் அங்கே, விரிவுரையாளராகப் பணிபுரிந்து கொண்டிருந்த டாக்டர். பி. திருஞானசம்பந்தத்துடன் பேச்சுக் கொடுத்தார். அமைச்சர் பெளதிகப் பட்டதாரி. எனவே உரையாடல் ஆழமாக இருந்தது. அத் துறையைவிட்டு வெளியே வருகையில் என்னிடம், “டாக்டர் திருஞானசம்பந்தத்தை அரசுப் பண்ரியில் அழைத்துக் கொள்ள ஏற்பாடு செய்தால் நன்றாயிருக்கும்” என்றார் அமைச்சர். நாங்கள் அழைப்பதற்கு முன்பு, கோவை பி. எஸ். ஜி கலைக் கல்லூரி அழைத்துக் கொண்டது. சில ஆண்டுகள் அங்கே நற்பணி புரிந்தார். பிறகு அரசுப் பணித் தேர்வாணைக் குழுவின் வாயிலாக, சென்னை மாநிலக் கல்லூரித் தலைமைப் பேராசிரியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பல்லாண்டுகள் மாநிலக் கல்லூரியில் செம்மையாகப் பணியாற்றியபின், மாநிலத்தின் கல்லூரிக் கல்வி இயக்குநராகப் பதவி உயர்வு பெற்றார். ஈராண்டுகளுக்குமுன் ஒய்வுபெற்ற அவரது அறிவியல் பட்டறிவு வீணாகிக் கொண்டு இருக்கிறது. அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் புயல் அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் பல்வேறு துறைகளை அமைச்சர் சுற்றிப் பார்க்கையில், எங்கும் குது.ாகலம் நிறைந்திருந்தது. எவ்விதச் சலசலப்பும் காணவில்லை.அது புயலுக்கு முந்திய அமைதி என்பது புலனாகவில்லை. துணைவேந்தர் திருவாளர் டி. எம். நாராயணசுவாமி பிள்ளை இல்லத்தில், அமைச்சர், நான் மற்றும் சில பேராசிரியர்கள் உணவருந்திக் கொண்டிருந்தோம். ‘மாணவர் விடுதிப்பக்கம் கலவரம்’, ‘கல்விச்சு என்ற செய்தியை இருவர் கொண்டு வந்தனர். இரு பேராசிரியர்கள் அங்கு விரைந்தனர். விரைந்து திரும்பினர். “முந்திய இரவு, வெளியே சென்றுவிட்டு அகாலத்தில் திரும்பிய இரு மாணவர்களை, காவல்காரர்கள், விடுதிக்குள் விட மறுத்தனராம், அப்போதே சிறிது குழப்பம் ஏற்பட்டது 'அம் மாணவர்கள் முற்பகல் முழுதும் மாணவர்களைத் திரட்டி வந்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/422&oldid=788223" இலிருந்து மீள்விக்கப்பட்டது