பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/423

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்ணாமலை பல்கலைக்கழகமானவர் கலவரமும் அதன் விளைவுகளும் 385 “இன்று மாலை, நடக்கவிருக்கும் கலை நிகழ்ச்சியை நடக்க வொட்டாது தடுக்கக் கலவரம் செய்கிறார்கள். “நிகழ்ச்சியைக் கைவிட்டு விடுவது நல்லது” என்ற செய்தியையும் கருத்தையும் கொண்டு வந்தனர். “என்ன செய்யட்டும்” என்று துணைவேந்தர் அமைச்சரைக் கேட்டார் ங்ங் நான் இருப்பதை மறந்துவிடுங்கள். சாதாரணமாக, இப்படிப்பட்ட நிலையில் என்ன செய்வீர்களோ அதைச் செய்யுங்கள்” என்றார் அமைச்சர். பணியாளர்கள், பல பக்கங்களில் இருந்தும் துணைவேந்தர் இல்லத்தைச் சூழ்ந்து கொண்டு பாதுகாக்கத் தலைப்பட்டார்கள். பல்கலைக் கழகம் காலவரம்பின்றி மூடப்பட்டது. துணைவேந்தர் பல்கலைக் கழக ஆட்சிக் குழுவின் அவசரக் கூட்டத்தைக் கூட்டினார். அரை மணியில் துணைவேந்தர் இல்லத்தின் மாடியில், அமைச்சரைக் கீழே விட்டுவிட்டுக் கூடினோம். பல்கலைக் கழகத்தைக் காலவரையின்றி மூடிவிடுவதாக ஆட்சிக்குழு முடிவு செய்தது. இதற்குள் மாணவர்கள் துணைவேந்தர் இல்லம் நோக்கி வருவதாகச் செய்தி எட்டிற்று. மாவட்ட ஆட்சித் தலைவரும் மாவட்டக் காவல்துறை அலுவலரும், அன்று காலையே அமைச்சர் வருகைபற்றி, அண்ணாமலை நகர் வந்திருந்தனர். அவர்கள் விரைந்து செயல்பட்டனர். பல்கலைக் கழகப் பாதுகாப்பிற்குப் போதிய காவற்படை வர ஏற்பாடு செய்து விட்டனர். எனவே, அண்ணாமலை நகரின் நிலைமை கட்டுக்குள் இருந்தது. சாலை வழியாக வந்தோம் அமைச்சரும் நானும் அன்றிர்வு இரயிலில் சென்னைக்குத் திரும்ப ஏற்கெனவே ஏற்ப்ாடு செய்திருந்தார்கள். இதை எதிர்ப்பார்த்த மாணவர்கள், இரயில் நேரத்திற்கு ஒரு மணி முன்னதாகவே, புகைவண்டி நிலையத்தைச் சூழ்ந்து கொண்டார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/423&oldid=788224" இலிருந்து மீள்விக்கப்பட்டது