பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/424

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

386 நினைவு அலைகள் இரவு எட்டு மணி அளவில் மாவட்ட ஆட்சித் தலைவரும் மாவட்டக் காவல் அலுவலரும் அமைச்சரைத் தனியே கண்டு உரையாடினார்கள். துன்ணைவேந்தரும் நானும் அமைச்சரோடு இருந்தோம். 'அய்யா! புகைவண்டி நிலையத்தில் ஈராயிரம் பேர்களுக்கு மேல் கூடியுள்ளார்கள். அதையும் சமாளித்துத் தங்களைத் திட்டமிட்டபடி இரயிலேற்றி அனுப்பி வைக்க எங்களால் «քւգ պւն "ஆனால் ஒன்று கூட்டம் வன்முறையில் புகுந்தால், தங்களைக் காப்பதற்காகத் தடியடியிலோ, அதற்கு மேலோ செல்ல நேரிடலாம். அதைத் தங்கள் காதில் போடுவது எங்கள்.கடமை” என்றார்கள். அமைச்சர் அமைதி இழக்கவில்லை. பதற்றம் கொள்ளவில்லை. "நிலைமையைச் சமாளித்து எங்களைச் சென்னைக்கு அனுப்பி வைக்க, வேறு வழியுண்டா?” என்று கேட்டார். "தங்கள் இரயில் பயணத்தை ரத்து செய்து விடுகிறோம். இயக்குநர் பயணச் சீட்டையும் திருப்பிக் கொடுத்துவிட்டு, இருவரும் இன்று திரும்பவில்லை என்று அறிவித்து விடுகிறோம். “தயவுசெய்து நீங்கள் தூங்காமல் விழித்திருங்கள். நள்ளிரவுக்குப்பின், சென்னைவரை காவல்படை உடன்வர் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துவிட்டு உங்கள் இருவரை காரில் சென்னைக்கு அழைத்துக்கொண்டு போகிறோம். ங், ங் எத்தனை மணிக்குப் புறப்படுவது என்பதைப் பின்னர் சொல்லுகிறோம்” என்றார்கள். அமைச்சர் இசைந்தார். 'இயக்குநர் எங்களோடு, விருந்தினர் விடுதிக்கு வந்து தம் அறையில் தங்கி இருக்கட்டும். புறப்படும்போது, நாங்கள் அவரை இங்கு அழைத்து வருகிறோம்” என்றார்கள். நள்ளிரவு பன்னிரண்டு மணிக்குமேல், மாவடட அலுவலா என்னை அழைத்தார். துணைவேந்தர் இல்லம் சென்றோம். அமைச்சரை அழைத்துக் கொண்டோம். முன்னும் பின்னும் காவலர் வண்டி பாதுகாத்துவர, அண்ணாமலை நகரில் இருந்து சென்னை வரை அமைச்சரும் அவருக்குப் பேச்சுத் துணையாக நானும் சென்னை சென்றடைந்தோம். அமைச்சர் அறிவுரையின்படி, மாவட்ட அலுவலர் இருவரும் கடலூரில் விடை பெற்றுக் கொண்டார்கள். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/424&oldid=788225" இலிருந்து மீள்விக்கப்பட்டது