பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/425

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்ணாமலை பல்கலைக் கழக மாணவர் ssusuvupй அதன் 5ölsmer♥♥t! 387 அண்ணா செய்த பெரியமனித உடன்படிக்கை அண்ணாமலை நகர் நிகழ்ச்சி சென்னையில், காற்றினும் விரைந்து எதிரொலித்தது. அப்போது அறிஞர் அண்ணா, சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக விளங்கினார். இதுபற்றிய கொள்கை ஒன்றின் முன்வடிவத்தைச் சட்டமன்றத்தில் முன்மொழிந்தார். - “மானவர்களையும் ஆசிரியர்களையும் தீவிர அரசியலுக்கு இழுப்பதில்லை என்ற பெரிய மனித உட்ன்படிக்கைக்குச் சென்னை சட்டமன்றத்தின் இரு அவைகளிலும் உள்ள அனைத்துக் கட்சிகளும் வருகின்றன.” அறிஞர் அண்ணா, இத் தீர்மானத்தின் பேரில் நாற்பது மணித்துளிகள் போல் அருமையாகப் பேசினார். ஒரே சிந்தனை “மாணாக்கரும் ஆசிரியர்களும் பொது விவகாரங்களைத் தெரிந்து கொள்வதையும் அக்கறை காட்டுவதையும் தடுக்க இயலாது. அக்கறை காட்டுவதோடு நிற்கட்டும். தீவிரமாக ஈடுபடுவதை அனைவருமாகச் சேர்ந்து, தடுத்து நிறுத்துவோம்” என்று உருக்கமாகப் பேசினார். இது நீதிக் கட்சியினரின் சிந்தனை காந்திய நெறி என்ன? மாணவர்கள் மாணவர்களாகச் செயல் படட்டும் என்பதாகும்: ஆங்கிலக் கல்விமுறையைப் புறக்கணிக்கும்படி இயக்கம் நடத்திய காந்தியடிகளார்கூட அதையும் மீறிக் கல்வி நிலையங்களில் சேர்ந்துவிட்டால், மானாக்கர் மாணாக்கராக இயங்கவேண்டும் என்று நெறிப்படுத்தியது, அவர்கள் நினைவுக்கு வந்து இருக்கும். அன்று சட்டமன்றத்தில், அம்பலூர் கரிய கவுண்டர் அவர்கள் பேசிய பேச்சு நெஞ்சை நெகிழ்வித்தது. பெரும்பான்மை கொண்ட ஆளுங்கட்சி எப்படி நடந்து கொண்டது? "எதிர்கட்சிக்குப் பெருமை வந்து விடுமே” என்று பொரும வில்லை. மாறாக, நாட்டுக்கு நன்மையானதா?’ என்று மட்டுமே சிந்தித்தது. முதலமைச்சர் காட்டிய வழியின்படி, கல்வி அமைச்சர் அறிஞர் அண்ணாவின் தீர்மானத்தை ஆதரித்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/425&oldid=788226" இலிருந்து மீள்விக்கப்பட்டது