பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/426

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3BB நினைவு அலைகள் அனைத்துக் கட்சியினரும் ஏற்றனர் தத்தம் கட்சி செயற்குழுக்களின் ஒப்புதலை எதிர்பார்த்து, பிற கட்சிகளும் அண்ணா முன்மொழிந்த உடன்படிக்கையை ஏற்றுக்கொண்டன. அத்தகைய கட்சிகளின் ஒப்புதல் முடிவாகும்வரை ஆட்சி, யாளர்களோ, கட்சிகளோ, இயக்குநரோ, இதுபற்றிப் பொது மேடைகளில் விவாதித்தல்கூடாது; ஆதரவு திரட்டி கட்சிகளுக்குச் சிக்கலான நிலைமையை உருவாக்கக்கூடாது. என்பதும் வாய்மொழியாக ஒப்புக் கொள்ளப்பட்டது. மேற்படி தீர்மானம் பற்றி, சென்னை சட்டமன்றப் பேரவை, விவாதிக்கையில், நான் அலுவலர்கள் பகுதியில் அமர்ந்து இருந்தேன். அமைச்சரின் ஆனை உடன்படிக்கை பற்றிய முடிவு எடுக்கப்பட்டதும் அமைச்சர் எனக்கு ஆணையிட்டார். என்ன ஆணை? “அந்தந்தக் கட்சிகள் இந்த உடன் படிக்கையை ஏற்றுக் கொள்ளும்வரை, நீங்கள் இதுபற்றிப் பொதுக்கூட்டங்களில் பேசாதீர்கள். "சினிமாவுக்குச் செல்லாதீர்கள் என்றும் பேசாதீர்கள்.” இது அமைச்சரின் ஆணை-இப்படி எனக்கு ஆணையிடுவானேன்? பின்னால் கூறுகிறேன். சில திங்களில் இவ் வுடன்படிக்கை அனைத்துக் கட்சிகளாலும் உறுதி செய்யப்பட்டது. இந்தியக் கல்வி அமைச்சரும் பின்பற்றினார் இந்தச் சீரிய வழிகாட்டலை, அப்போது இந்திய அரசின் கல்வி அமைச்சராக இருந்த உமாயூன் கபீர் கவனித்தார். பேராசிரியராகப் பணிபுரிந்து பட்டறிவு பெற்ற அவர், இவ் வுடன்படிக்கை பெரும் நன்மை விளைவிக்கக் கூடியது என்பதை உணர்ந்தார். "சென்னை மாநிலத்தின் வழிகாட்டலைக் கவனித்து, பிற மாநிலங்களும் இத்தகைய உடன்படிக்கைக்கு வருவது நல்லது” என்று அவர், எல்லா மாநிலக் கல்வி அமைச்சர்களுக்கும் சுற்றுக் கடிதம் எழுதினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/426&oldid=788227" இலிருந்து மீள்விக்கப்பட்டது