பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/427

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்ணாமலை பல்கலைக் கழக மாணவர் கலவரமும் அதன் súkmeneusgibth 38.9 தன் கட்சி, செல்வாக்குப் பெறும் சாத்தியக் கூறுகளைக் கை விட முன்வந்த அண்ணா போன்ற தலைவரும், ஏற்கெனவே பெற்றிருந்த செல்வாக்கையும் அமைப்புகளையும் நொடியில் துறந்த, காமராசர் போன்ற தலைவர்களும் பிறபகுதிகளில் மக்களை வழி நடத்தியிருந்தால், தீவிர ஈடுபாடு, பழங்கதையாகி இருக்கும். ஏழு ஆண்டுகள் இவ் வுடன்படிக்கை செயல்பட்ட ஏழு ஆண்டுகளில் தமிழ் நாட்டு மாணவர்கள் இடையே அமைதி நிலவியது எனலாம். ஆசிரியர்களைப் பொறுத்த மட்டில், அவர்கள் அப்போது கட்சி அணிகளாகச் செயல்படவில்லை. எல்லாச் சமயத்தவர்கள் - எல்லாச் சாதியினர்கள் - எல்லாக் கட்சியினர்களின் நம்பிக்கைக்கு உரியவர்களாக - சார்புகளை விளம்பரப்படுத்திக் கொள்ளாதவர்களாக விளங்கினார்கள். நான் பொது மனிதன் ‘என்னைப் பொறுத்த மட்டில் பொதுவானவனாகச் செயல் பட்டேன். 'அறிவுடையார், எல்லாமுடையார் அறிவைப் பெறும் வழி கற்றலே. கற்றல் பொழுது போக்கல்ல; முயற்சி; ப்ெருமுயற்சி, மனத்தை ஒரு மனப்படுத்த வேண்டிய முயற்சி. 'நிலையத்தைவிட்டு நகரும் பேருந்துவோடு ஒடியபடியே, 'நாளைக்கே பாட்டியைப் பார்த்து, நான் நன்றாயிருப்பதாகச் சொல்லுங்கள் என்பதைப் போகிற போக்கிலே, காதில் வாங்கிக் கொள்ளலாம். அழுத்தமான கல்வி 'கணக்கும் வழக்கும் அப்படியல்ல. அவற்றை ஊன்றிப் படிக்க வேண்டும். 'இப்போது படிப்பது. எப்போதைக்கும் பயன்படுதல் வேண்டும் வாழ்நாள் முழுவதற்கும் பயன்படல் வேண்டும். 'அய்ம்பது அறுபது ஆண்டுகளுக்குக் கைகொடுக்கக் கூடியவற்றைக் கற்கப் பெரும்பாலோருக்குப் பதினொரு ஆண்டு களும் சிலருக்குப் பதினைந்து ஆண்டுகளுமே கிடைக்கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/427&oldid=788228" இலிருந்து மீள்விக்கப்பட்டது