பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/429

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

390 நினைவு அலைகள் 'அவ் வாண்டுகளைக் கற்பதற்கே, உடலோம்பலுக்கே முழுமையாகச் செலவிடுங்கள்: நட்பை வளர்த்துக் கொள்வதும் கற்றலின் கூறாகும். 'பாட நூல்களை மட்டுமன்றிப் பொது அறிவு, வாழ்ந்தோர் வரலாறுகள், சான்றோர் நல்லுரைகள் முதலியனவற்றைப் படிப்பதிலும் நாட்டம் செலுத்துங்கள். 'இவ்வளவு செய்ய, ஒரு மனப்பட்ட ஈடுபாடு தேவை. இத்தலைமுறை மாணாக்க்ருக்கு இரு வகைக் கவனச் சிதைவுகள் உண்டு. 'ஒன்று மாணாக்கர்களை, ஊர் விவகாரங்களுக்கு இழுத்தல்; மற்றொன்று, திரைப்படக் கவர்ச்சி. ‘எங்கள் தலைமுறைக்கு வழிகாட்டிய காந்தியடிகளார் ‘மாணவர்கள் மாணவர்களாக இயங்கங்கள்’ என்று வமி காட்டினார். 'பிற கட்சியினரும் பிஞ்சுப் பருவத்தினரைக் கிளர்ச்சிகளுக்கு, பேரணிகளுக்குத் தள்ளவில்லை. எனவே எங்கள் நாட்டம் கல்வியின் பாற் சென்றது. - 'திருமண வீடு, வாயிலில், பத்துப் பன்னிரண்டு வயதுச் சிறுவர் சிறுமிகள். அவர்கள் சந்தனத்தையும் பூவையும் கற்கண்டையும் நீட்டும்போது, மெய்ம்மறந்து போகிறோம். 'உள்ளே நுழைந்தால், நம்மை வரவேற்று, அழைத்துச் சென்று, அமர வைப்பதற்குப் பெரியவர்களைக் காண்கிறோம். 'உணவு பரிமாறுவதைக் கண்காணிக்க, நயம் மிக்க பட்டறிவில் முதிர்ந்த, பெரியவர்களைப் பார்க்கிறோம். ** 'பருவத்திற்கு ஏற்ற பொறுப்பு. இயல்பையொட்டிய இவ் வறிவை நாம் அடிக்கடி நினைத்துக் கொள்ளல் நல்லது. ‘மாணாக்கரை அரசியல், ஊர் வம்புகளில் தள்ளாதிருங்கள். அவை, காட்டாற்று வெள்ளம் போன்றது. அவற்றை சிறுவர்களோ இளைஞர்களோ சமாளித்தல் அரிது. 'பக்தியால் உந்தப்பட்டு. மயில்ாடுதுறைக்குச் சென்று துலாமுழுக்கு போடும் பெற்றோர், தம் கைப் பிடிப்பில் பிள்ளைகளை மூழ்க வைக்கிறார்கள். "அவர்களைக் கரையேற்றி உட்கார வைத்துவிட்டு, தாங்கள் மூழ்கிக் குளிக்கிறார்கள். இது நமக்குப் பாடம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/429&oldid=788230" இலிருந்து மீள்விக்கப்பட்டது