பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/430

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்ணாமலை பல்கலைக் கழக மாணவர் கலவரமும் அதன் ിഞണു് 391 'அரசியல் ஈடுபாடு என்னும் கவனச் சிதைவில் இருந்து மாணாக்கரைக் காப்பாற்றுவது போலவே, திரைப்படக் கவர்ச்சி என்னும் சிதைவில் இருந்தும் காப்பாற்றுதல் தேவை. இக் கால மாணவர்க்குப் பொறுப்பு தேவை 'எனது மாணவப் பருவத்தின்போது, சென்னை மாநகர் முழுவதிலும் நான்கு ஐந்து திரைப்படக் கொட்டகைகளே இருந்தன இப்போது நாற்பது அய்ம்பதிற்குமேல் இருக்கின்றன. ‘நான் தாண்டிச் செல்ல வேண்டியிருந்த கவனத்திருப்ப மையங்களைவிட, இக் கால மாணாக்கர், தப்பிச் செல்ல வேண்டிய மையங்கள் அதிகம் 'பள்ளிப் பருவத்தை முடிக்கும் வரையிலாவது சினிமாவை மறந்து, படிப்பை நினைந்து, அறிவைத் தேடி ஆற்றலைப் பெற்று, மாணவர் நற்படை வெளி வரட்டும். "அவர்களிலிருந்து வருங்கால, காந்தி அண்ணல், பிரதமர் நேரு, பொறியியல் வல்லுநர் விசுவேசுவரய்யர், விஞ்ஞானி சி. வி. இராமன் போன்றோர் தோன்ற உதவுங்கள். "கவனச்சிதைவு, வகுப்பறை வேலையைக் கற்றலின் தரத்தைப் பாதிக்கும். எனவே அதைப் போக்குதல் ஆசிரியர்களுக்கு மட்டுமான பொறுப்பு என்று ஏமாந்து போகாதீர்கள். 'இந்தப் பொறுப்பை, பெற்றோர்களும் மக்கள் தலைவர்களும் பகிர்ந்து கொள்ளுங்கள். மேற்கூறிய கருத்துகளை மையமாகக் கொண்டே என் உரைகள் அனைத்தும் சுழலும். முதலமைச்சர் முன்பும் சரி, கல்வி அமைச்சர் முன்னிலையிலும் சரி, இருவருமே இல்லாதபோதும் சரி, இவற்றையே சொல்லுவேன். இதனால்தான், உடன்படிக்கைக்கு ஒப்புதல் கிடைக்கும்வரை அதுபற்றிப் பேசவேண்டாம் என்றதோடு, சினிமா புற்றியும் பேச வேண்டாமென்று எனக்கு வாய்ப்பூட்டுப் போடப்பட்டது. துணைவேந்தருக்கு மனப்புண் 1958ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் அண்ணாமலை பல்கலைக் கழக வளாகத்தில் நடந்த அமளி, எவர் மனத்தையும் புண்படுத்தும். துணைவேந்தர் டி. எம். நாராயணசாமிப் பிள்ளை மனப்புண் பட்டதில் வியப்பில்லை. எனவே, தாம் தொடர்ந்து இரண்டாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/430&oldid=788232" இலிருந்து மீள்விக்கப்பட்டது