உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/431

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

392 நினைவு அலைகள் முறை துணைவேந்தராக இருக்க விரும்பவில்லை என்று அவர், கல்வி அமைச்சர் உட்பட, பல பெரியவர்களிடம் வலியக் கூறி வந்தார். ஒரு கட்டத்தில் கல்வி அமைச்சர், புதிய துண்ைவேந்தராக எவரைப் போடலாம் என்று என்னைக் கேட்டார். பேராசிரியர் ஆர். பி. சேதுபிள்ளை பெயரைக் கூறினேன். “நல்ல யோசனை’ என்றார் சில நாள்களுக்குப் பிறகு, அந்த யோசனை ஏற்கப்படவில்லை என்றார். அ. ப. கழகத் துணைவேந்தராக அழைப்பு இன்னும் சில நாள்கள் சென்றன. அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் இணைவேந்தரான டாக்டர் எம். ஏ. முத்தய்யா செட்டியார், என்னோடு தொடர்பு கொண்டார். திரு. டி. எம். நாராயணசுவாமி பிள்ளைக்குப் பதில் துணை வேந்தராக வரும்படி என்னை அழைத்தார். அன்பு தோய்ந்த அழைப்பு; எனினும், அதைச் சிக்கெனப் பிடித்துக் கொள்ளத் தெரியவில்லை. 'அய்யா! தங்கள் நல்லெண்ணத்திற்கு நான் பெரிதும் நன்றியுடையவன். பகல் உணவுத் திட்டம், பள்ளிச் சீரமைப்பு, இலவசச் சீருடை வழங்குதல் ஆகிய திட்டங்கள்-இவற்றைத் தொடங்கிப் புகழ் பெற்றுவிட்டு, பாதியில் விட்டுவிட்டுப் போவது முற்ைய்ாக இராது. "இதை மேலும் பரப்புவதற்கு என்னை விட்டுவிடுங்கள்” என்று பணிவோடு வேண்டிக் கொண்டேன். செட்டி நாட்டரசர் ஒயவில்லை. முதலமைச்சர் காமராசரை அணுகினார். என்னைத் துணைவேந்தராக அனுப்பி வைக்கும்படி வேண்டிக் கொண்டார். முதலமைச்சர் காமராசர் முடிவு என்ன? “நெ. து. சு வை வற்புறுத்தாதீர்கள். அவர் விருப்பத்திற்கே விட்டுவிடுங்கள்” என்று கூறி, செட்டிநாட்டு அரசரைச் சமாதானப் படுத்தி அனுப்பினார். இத் தகவல் பல்லாண்டுகள்வரை, கிணற்றில் வீழ்ந்த கல்லாகக் கிடந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/431&oldid=788233" இலிருந்து மீள்விக்கப்பட்டது