உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/432

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

sledorenormnena, usbeksosvë sips, unnsvorsuri sausungpin eigis: ::::::::::::::soli 393 1972ஆம் ஆண்டு மே திங்கள் தமிழ்த் தொண்டர் சிறுவை மோகனசுந்தரம் முன்னின்று இயக்கித் தமிழ்த் தொண்டாற்றி வரும் நக்கீரர் கழகம் என் மணி விழாவினைச் சீரும் சிறப்புமாகக் கொண்டாடியது. 27-10-1940 அன்று எனது மணவிழாப் பாராட்டு நடந்த அதே கோகலே மண்டபத்திலேயே, மேற்படி மணிவிழாவும் நடந்தது. நீதிபதி கோகுலகிருஷ்ணன், டாக்டர் முத்தய்யா செட்டியார் சிலம்புச்செல்வர் ம. பொ. சிவஞானம் முதலியோர் பங்கு கொண்டு என்னை வாழ்த்திப் பெருமைப்படுத்தினர். அவ் விழாவில், செட்டி நாட்டரசர், 1958 ஆம் ஆண்டு என்னை அண்ணாமலை பல்கலைக்கழகத் துணைவேந்தராக அழைத்த இரகசியத்தை வெளியிட்டார். அவையோர் வியப்பில் ஆழ்ந்தனர். கூடுதல் சம்பளம் கேட்கவில்லை வலிய வந்ததை மறுத்துவிட்டதைப் போல், மற்றொரு தவறும் செய்தேன். அதையும் தெரிந்து கொள்ளுங்கள். திரு. ஆப்ரகாம், சென்னை மாகாணப் பொதுப்பணித் துறையின் தலைமைப் பொறியராகச் செயல்பட்டு வந்தார். அவர், சென்னை, செனாய்நகரில்தான் குடி இருந்தார். திருமதி ஆப்ரகாமும் என் மனைவி காந்தம்மாளும் கல்லூரிப் பருவம் முதல் நட்புக் கொண்டவர்கள். ஒருநாள், திரு. ஆப்ரகாம் என் வீடு தேடி வந்தார்: கலந்துரையாடினார். “நம்மைப் போன்ற துறைத்தலைவர்களுடைய சம்பளம் 1500150/2-1800 என்று முடிகிறது. “நீங்களும் நானும் உச்ச மட்டத்தை அடைந்துவிட்டோம். அதே சம்பளத்தில் தேங்கிக் கிடக்கிறோம். “நமக்கு முன்னர், திரு. அப்பாதுரை முதலியார் அத்தகைய நிலையில் இருந்தார். அதை அவர் முறையிடவில்லை. ஆனால், எவரோ ஒருவர், முதலமைச்சர் காதில் போட்டார். “காமராசர். அப்பாதுரையின் சம்பளத்தை 2000 ரூபாவாக உயர்த்தி விட்டார். “நாம் இருவருமாகச் சென்று, முதலமைச்சரிடம் நம் நிலையைச் சொல்லுவோம். நமக்கும் ஊதிய உயர்வு கிடைக்கலாம்” என்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/432&oldid=788234" இலிருந்து மீள்விக்கப்பட்டது