பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/434

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடியரசுத் தலைவர் கலந்து கொண்ட மாநாடு 395 சென்னை மாநிலத்தில் முதல் ஊதியக்குழு அப்போதைய தலைமைச் செயலர் திரு. கே. ராமுன்னி மேனன் அவர்கள் தலைமையில் இயங்கிற்று. அக் குழு எல்லா அரசுத்துறைத் தலைவர்களையும் கலந்து ஆலோசித்தது; வினாத்தாள் கொடுத்து கருத்துகளைத் தெரிந்துக் கொண்டதோடு, நேர்முகப் பேட்டிக்கும் ஏற்பாடு செய்தது. பொதுக்கல்வி இயக்குநராக இருந்த நான் பேட்டி காண நாள் குறித்து இருந்தார்கள். அதற்குச் சில நாள்கள் முன்னதாக கா. சு. திருவள்ளுவன் மறைந்தான். எனவே, அந்த நேர்முகப் பேட்டியில் இருந்து என்னை விடுவிக்கும்படியும் ஏற்கெனவே எழுத்து வழி கொடுத்து இருந்த ஆலோசனைகளை மீண்டும் வற்புறுத்துவதாகவும் நான் அக் குழுவிற்கு எழுதினேன். குழுவினர் பெரிய மனது பண்ணி, பல வாரங்கள் அவகாசம் கொடுத்துப் பேட்டிக்கு வருமாறு அழைத்தார்கள். அப்படியே சென்று கருத்துகளை நேரில் தெரிவித்தேன். ‘எல்லா ஊழியர்களுக்கும் வாழ்க்கைக்குப் போதிய சம்பளம் கொடுப்பது நமது குறிக்கோளாக இருக்க வேண்டும். "சம பொதுத் தகுதிக்குச் சம ஊதியம் என்ற அடிப்படையில் ஊதிய விகிதத்தை ஏற்பாடு செய்ய வேண்டும். 'முன் பயிற்சிக் காலம் தேவைப்படுகிற பதவிகளுக்கு, அந்தக் காலத்திற்குரிய ஊதிய உயர்வுகளைச் சேர்த்துத் தொடக்க சம்பளமாக வைக்க வேண்டும். ‘எழுத்தர் வேலைக்குப் பள்ளி இறுதித் தேர்ச்சி பெற்றால் போதும். 'இடைநிலை ஆசிரியர் பதவிக்குப் பள்ளி இறுதித் தேர்ச்சி யோடு ஈராண்டு ஆசிரியர் பயிற்சி பெற்றுத் தேர்ச்சி பெறுதல் வேண்டும். 'எனவே, எழுத்தர்க்கு தொடக்க சம்பளம் என்னவோ, அதோடு இரண்டு ஊதிய உயர்வுகள் சேர்த்து ஆசிரியர்களுக்குத் தொடக்க சம்பளம் முடிவு செய்ய வேண்டும். 'பொதுத் தகுதியாகப் பல்கலைக் கழகப் பட்டம் பல வேலைகளுக்குத் தேவைப்படுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/434&oldid=788236" இலிருந்து மீள்விக்கப்பட்டது