பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/436

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடியரசுத் தலைவர் கலந்து கொண்ட மாநாடு 397 அந்தக் குழுவின் பரிந்துரைகளின்படி எல்லா இயக்குநர்களின் சம்பளமும் அப்படியே விடப்பட்டது. ஆசிரியர்களுக்குப் பெரும்பாலும் நான் வற்புறுத்திய கொள்கைகளை ஏற்றுக் கொண்டார்கள் எனலாம். 'தங்களைவிடத் தங்களை இயக்கும் முதல் தொண்டன், தங்கள் நலனை விழிப்பாகப் பாதுகாத்துக் கொள்கிறார்’ என்கிற நம்பிக்கை மாநிலம் முழுவதும் பரவி விட்டது. எனவே, கோரிக்கைகளைச் சொல்லிவிட்டால் போதும்; பேரணிகள், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் முதலியன தேவையில்லை’ என்று ஆசிரியர்கள் கொதித்து எழாமல் செயல்பட்டார்கள். வடார்க்காடு மாவட்டப் பள்ளிச் சீரமைப்பு மாநாடு சமுதாயத்தின் முயற்சியின், உழைப்பின், நன்கொடைகளின் வாயிலாக, அந்தந்த ஊர்ப் பள்ளிகளைச் சீரமைக்கும் இயக்கம் தமிழ் நாட்டின் பற்பல மாவட்டங்களிலும் பரவியது. 1960 ஆம் ஆண்டின் நடுவில், வடார்க்காடு மாவட்டம் வேலூரில் அத்தகைய மாநாட்டிற்கான முன்னேற்பாடுகள் நடந்தன, நிர்வாகிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோர் ஆர்வத்தோடு ஆதரவு தந்தார்கள். நல்ல பலன் கிட்டுமென்று அமைப்பாளர்களுக்குத் தோன்றியது. எனவே, முதலமைச்சர் காமராசரையே, வேலூர் மாநாட்டிற்கு அழைத்து வரவேண்டுமென்று அவர்கள் என் காதில் போட்டு வைத்தார்கள். ஏற்பாடுகள் முற்றுப்பெறும் தருவாயில் நினைவுபடுத்தச் சொல்லியிருந்தேன். சில வாரங்கள் சென்றன. முதலமைச்சர் என்னைக் கூப்பிட்டு வரச் சொன்னார். கோட்டை அலுவலகத்தில் அ, வரைக் கண்டேன்; வழக்கம் போல் அன்பாக வரவேற்றார் "குடியரசுத் தலைவர் ஆகஸ்ட் திங்கள் சென்னைக்கு வரவிருக்கிறார். அப்படி வருகையில், பள்ளிச் சீரமைப்பு மாநாடு ஒன்றைக் காண விரும்புகிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/436&oldid=788238" இலிருந்து மீள்விக்கப்பட்டது