பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/437

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|ைெனவு அலைகள் 3. 3 8. 'ஆனால் அதற்காக நெடுந்து ரம் பயணம் செய்ய விரும்பவில்லை. எழுபது, எண்பது மைல்களுக்குள் ங்காவது, சீரமைப்பு மாநாடு ஏற்பாடு செய்ய (ԼՔւգ-ԱվLՐՈ ?” என்று என்னைக் கேட்டார். “வேலூர் பகுதிக்காக, ஏற்கெனவே ஒரு மாநாடு எற்பாடு செய்து கொண்டு இருக்கிறார்கள். முதலமைச்சர் அய்யா, ஒப்புதல் தந்தால், அடுத்த சரகங்களையும் இணைத்துப் பெரிய மாநாடாகவே நடத்திவிடலாம்” என்றேன். 'வேலூர் அதிக தொலைவு இல்லை. குடியரசுத் தலைவர் அந் நகரில் உள்ள கிறித்தவ மருத்துவமனைப் பொன் விழாவிற்குத் தான் வருகிறார். 'அன்றைக்கே வேலூரில் பள்ளிச் சீரமைப்பு மாநாடு நடத்த முடியுமானால் அவருக்கு அலைச்சல் குறையும். ஒரு சரகத்திற்கான மாநாடாக நடத்தாமல், அக்கம்பக்கத்துச் சரகங்களையும் சேர்த்து ஏற்பாடு செய்து விடுங்கள்” என்று கட்டளை இட்டார். 'அப்படியே செய்து விடுகிறேன் அய்யா. அம்மாநாட்டோடு எந்தெந்தப் பெரிய மனிதர்களைச் சேர்க்கலாமென்று குறிப்புக் காட்டினால், நன்றாயிருக்கும்” என்றேன். “இதுவரை செய்து வந்ததுபோல், எல்லாக் கட்சியாரையும் சேர்த்துக் கொண்டு நடத்துங்கள்” என்றார். 'குடியரசுத் தலைவர் வருகிற மாநாடு ஆகையால், எவரை வர வேற்புக் குழுத் தலைவராக எவரைக் குழுச் செயலாளராக,யார் யார் உறுப்பினர்களாக இருக்க வேண்டுமென்று தங்கள் கருத்தைத் தெரிவித்தால், உதவியாக இருக்கும்” என்றேன். 'நீங்கள் கேட்பதால் சொல்லுகிறேன். அப்படியே இருக்க வேண்டுமென்று வற்புறுத்தத் தேவையில்லை. பூர்வாங்க கூட்டத்தின் நடப்பைப் பார்த்து, விட்டுக் கொடுக்க வேண்டி யிருந்தால் விட்டுக் கொடுக்கலாம்” என்ற பீடிகையோடு, வடார்க்காடு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்-சட்டமன்ற உறுப்பினர்கள்-ஆகியோரின் தன்மைகளை மதிப்பிட்டார். ஒளிவு மறைவின்றி என்னோடு தம் கருத்தினைப் பகிர்ந்து கொண்டார். நாடாளுமன்ற உறுப்பினர்கள்-சட்டமன்ற உறுப்பினர்கள் பெயர்களை நான் ஒன்று விடாமல் சொன்னது பற்றி வியந்தார். இறுதியாக, காங்கிரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு முகமது அன்வர் அவர்களை வரவேற்புக் குழுத் தலைவராகவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/437&oldid=788239" இலிருந்து மீள்விக்கப்பட்டது