பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/438

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Szuroé someos uit obgl Glomsort- unmism G 3.99. காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் திரு வி. கே. கிருஷ்ணமூர்த்தி அவர்களையும் மாவட்டக் கல்வி அலுவலர் திரு. ஆர். பெருமாள் அவர்களையும் செயலாளர்களாகவும் சேர்க்க முடியுமாவென்று பார்க்கும்படி கட்டளை இட்டார். அதை ஏற்றுக்கொண்டேன். மாவட்ட அலுவலருடன் தொலைபேசி வழியாகத் தொடர்பு கொண்டேன். வேலூர் பள்ளிச் சீரமைப்பு மாநாட்டை, வடார்க்காடு மாவட்ட பள்ளிச் சீரமைப்பு மாநாடாக் விரிவு படுத்த வேண்டும். அமைப்புக் கூட்டம் அதைப் பற்றிக் கலந்து பேச, வடார்க்காடு மாவட்டப் பெரியவர்களின் கூட்டம் ஒன்றைக் கூட்டும்படி கேட்டுக் கொண்டேன். அவர் அப்படியே செய்தார். முன்னதாக அறிவித்துவிட்டு நானும் அக் கூட்டத்தில் கலந்து கொண்டேன். அதற்காகக் காரில், வேலூர் சென்றேன். அங்குக் கடைத் தெருவைக் கடந்து செல்கையில், ஒரு மூத்தவர் நடந்து செல்வதைக் கண்டேன். என் காரை அவர் அருகில் நிற்கச் செய்தேன். கசப்பு நீங்கியது. -- "திரு. புண்ணியக்கோடி முதலியார், என் காரில் ஏறிக் கொள்ளுங்கள். உங்களோடு பேச வேண்டி இருக்கிறது” என்றேன். மறுக்க முடியாமல், அவரும் என் காரில் ஏறிக்கொண்டார். கார் புறப்பட்டதும், திட்டமிடவிருக்கிற வேலூர் பள்ளிச் சீரமைப்பு மாநாடு பற்றிய செய்தியைத் தெரிவித்தேன். “மாவட்டக் கல்வி அலுவலரிடமிருந்து சுற்றறிக்கை வந்திருக்கிறது. நிர்வாக மானியம் பற்றி, கல்வித்துறைக்கும் எனக்கும் வழக்கு மன்றத்தில் வழக்கு வந்து இருக்கிறது. “அந்தக் கசப்பில், இன்றைய மாலை நடக்கப்போகும் ஆலோசனைக் கூட்டத்திற்கு வரவேண்டாமென்று நினைத்து இருந்தேன். ஆனால் இப்போது மனத்தை மாற்றிக்கொண்டேன். “நிர்வாக மானியம் பற்றிய முறையீட்டில் ஆணையிடும் உரிமை உங்களுக்கு இருந்திருந்தால், விவகாரத்தை உங்கள் மட்டத்தில் முடித்துக்கொண்டு இருப்பேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/438&oldid=788240" இலிருந்து மீள்விக்கப்பட்டது