உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/439

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40Ա) நினைவு அலைகள் "நீங்கள் தலையிட உரிமையில்லாமையால், வழக்குத் தொடர நேர்ந்துவிட்டது. பொறுத்துக் கொள்ளுங்கள். "நான் கூட்டத்திற்கு வருகிறேன். ஒத்துழைப்பு தருகிறேன்” என்றார் திரு. புண்ணியகோடி முதலியார். “நீங்கள் என்னைவிட மூத்தவர்கள். இருப்பினும் கூடுதலாகப் பட்டறிவு பெற்றவன் என்பதால் அறிவுரை கூறுகிறேன். "மண்டை உள்ளவரை சளி உண்டு, வாழ்க்கை உள்ளவரை தொல்லை உண்டு. அவ்வப்போது, துன்பம் வரும்; வழக்குகள் வரும்: எரிச்சல்கள் ஏற்படும். இவற்றிற்கு இடையில் நடக்க வேண்டியவை, காலா காலத்தில் நடந்துகொண்டே இருக்க வேண்டும். "தனி வாழ்க்கைக்கும் பொதுப்பணிகளுக்கும் இதே நியதிதான். வழக்கைப் பற்றிய நினைப்பை ஒதுக்கிவிட்டு, பள்ளிச் சீரமைப்பு என்னும் நாட்டுப் பணிக்கு உதவி செய்யுங்கள்” என்று அவரை வேண்டிக் கொண்டேன். திரு. புண்ணியக்கோடி முதலியார், வேலூர் நகர மூத்த பள்ளி நிர்வாகிகளில் ஒருவர்; மக்கள் தொடர்புடையவர், செல்வாக் குடையவர். அவர் கொடுத்த வாக்குறுதிப்படி, கூட்டம் தொடங்குவதற்கு முன்பே, வந்துவிட்டார். நானும் பதினைத்து மணித்துளிகள் முன்னரே, கூட்டம் நடக்கும் இடத்திற்குச் சென்றுவிட்டேன். பெரியவர்கள், வரவர, நேரே என்னிடம் வந்தனர். குடியரசுத்தலைவர் டாக்டர் ராசேந்திர பிரசாத்தே, வேலூர் பள்ளிச் சீரமைப்பு மாநாட்டிற்கு வரும் வாய்ப்பு இருப்பதைத் தனியாக அவர்களிடம் கூறினேன். அதனால், நமக்குப் பொறுப்பு அதிகமாகி விட்டது. மக்கள் ஆதரவைத் திரட்டுவதோடு, வரவேற்புக்குழு உறுப்பினர்கள், தத்தம் வீட்டுத் திருமணமாகக் கருதி, ஒத்துழைக்கும்படி வேண்டிக் கொண்டேன். கூட்டம் முறையாகக் கூடுவதற்கு முன்பே, இச் செய்தி பலர் சிந்தனைகளில் வேலை செய்தது. - முறைப்படி கூடிய கூட்டத்தில், தோழமை உணர்வு கொப்பளித்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/439&oldid=788241" இலிருந்து மீள்விக்கப்பட்டது