பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/440

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடியரசுத் தலைவர் கலந்து கொண்ட மாநாடு 401 எவர் எவர், எப் பொறுப்பை ஏற்பது என்று குறிப்பு காட்டும் படி என்னையே கேட்டுக் கொண்டார்கள். “நான் கூறும் யோசனையே இறுதி அல்ல. அவற்றோடு உங்கள் ஆலோசனையும் கூறுங்கள். கூடிய வரையில் எல்லாவற்றிற்கும் இடம் கொடுக்கும் வகையில், ஏற்பாடுகள் செய்வோம்” என்று சொல்லிவிட்டு, “அரசியல் கவர்ச்சியால், மாவட்டக் கல்வி அலுவலர் பதவியை உதறிவிட்டுத் தேர்தலில் குதிக்காது இருந்தால், திரு. முகமது அன்வர், இன்று என் இடத்தில் பொதுக் கல்வி இயக்குநராக இருப்பார். “அரசியலில் ஈடுபட்டதால், நாடாளுமன்ற உறுப்பினராக விளங்குகிறார். அவரை வரவேற்புக்குழுத் தலைவராக இருக்கும்படி வேண்டிக் கொள்ளலாமா?” என்று கேட்டேன். அவையோர் நெகிழ்ந்தனர். என் குறிப்பை ஒருமனதாக ஏற்றனர். “செயலாளர்களாக மாவட்டக் கல்வி அலுவலரும் ஒரு சட்டமன்ற உறுப்பினரும் இருந்தால் நன்றாயிருக்கும். தமிழ் அறிஞரான, திரு. வி. கே. கிருஷ்ணமூர்த்தியை அப் பொறுப்பை ஏற்கும்படி கேட்போமா?” என்றேன். அதற்கும் ஒருமித்த ஆதரவு இருந்தது. பிற உறுப்பினர்களை, அவையோர், சொல்லச் சொல்ல, ஏற்றுக் கொள்ள நேர்ந்தது. தொடக்கம், பெரும் வெற்றியாக முடிந்தது. எல்லோரும் ஆர்வத்தோடு கலைந்தார்கள். நடந்ததை முதலமைச்சரிடம் நேரில் தெரிவித்தேன். அவருக்கும் மகிழ்ச்சியே. 50,000 பேர் வருவார்கள் சில நாள்களுக்குப்பின், குடியரசுத் தலைவரின் வேலூர் நிகழ்ச்சிகளைச் சரியாக ஏற்பாடு செய்யும் பொருட்டு, முதலமைச்சர் காமராசரே, வேலூர் சென்றார். தலைமைச்செயலர் திரு. சத்தியநாதன், காவல்துறையின் தலைமை அலுவலர், பொதுப்பணித் துறையின் தலைமைப் பொறியர், திரு. ஆபிரகாம், ஆகியோருடன் நானும் சென்றேன். பள்ளிச் சீரமைப்பு மாநாடு, வேலூர் கோட்டைத் திடலில் நடத்துவதென்று சென்னையிலே முடிவு செய்யப்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/440&oldid=788243" இலிருந்து மீள்விக்கப்பட்டது