பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/441

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

402 நினைவு அலைகள் அத் திடலைப் பார்வையிட்டு, தக்க இடத்தை முதலமைச்சர் தேர்ந்து எடுத்தார். எவ்வளவு பெரிய பந்தல் போடுவது என்று கேள்வி எழுந்தது. முதலமைச்சர் என்னைப் பார்த்து, "மாநாட்டுப் பந்தல் எவ்வளவு பெரியதாக இருக்க வேண்டும்?” என்றார். 'அய்ம்பதாயிரம் பேர்களுக்கு இடம் கொடுப்பதாக இருக்க வேண்டும்” என்றேன். "காலையில் முதல் நிகழ்ச்சியாக இந்த மாநாடு, ஏற்பாடாகி இருந்தால், அவ்வளவு பெரிய கூட்டத்தை எதிர்பார்க்கலாம். மாலையில் இறுதி நிகழ்ச்சி ஆயிற்றே! அவ்வளவு பேர்கள் கூடுவார்களா? பகலிலேயே குடியரசுத் தலைவரைப் பார்த்துவிட்டுப் போய் விட மாட்டார்களா?” என்று முதலமைச்சர் கேட்டார். 'நன்கொடையாளர்கள் பதினைந்து ஆயிரம் பேர் ஆவார்கள். ஒவ்வொருவருக்கும் ஒர் அழைப்பு அளிப்பதாக ஏற்பாடு உரியவர் வர இயலாவிட்டால், வேறு ஒருவருக்குக் கொடுத்தனுப்புவார் என்று எதிர்பார்க்கிறோம். "இம் மாவட்டத்தில் பதினைந்தாயிரம் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் உள்ளனர். அவர்களில் நூறு, இருநூறு பேர்களைத் தவிர மற்றவர்கள் மாநாட்டிற்கு வருவ து உறுதி. t “பொது மக்கள், ஊராட்சி, நகராட்சி மன்றத் தலைவர்கள், உறுப்பினர்கள் ஆகியவர்கள் பத்தாயிரம் கூடலாம் என்பது எங்கள் மதிப்பீடு. “சில ஆயிரம் ஆசிரியர்களாவது மனைவி மக்களோடு வருவார்கள். இது அவர்கள் திருவிழா-எனவே, அய்ம்பதாயிரம் மக்கள் உட்கார இடம் இருத்தல் நல்லது” என்றேன். “சரி, சரி, அப்படியே செய்துவிடுங்கள். ஆனால் ஒன்று. பந்தல் காலியாக இருக்காதபடி இயக்குநர் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்றார். - அப்படி இரு தரப்பிலும் ஏற்பாடு செய்யப்பட்டது. அவ்வப்போது வேலூர் சென்று, ஏற்பாடுகளையும் நன்கொடைப் பெருக்கத்தையும் கவனித்து ஊக்கப்படுத்தி வந்தேன். இப்படியிருக்கையில், 1960 ஜூலை 30 மாலை நான் சென்னைக்குத் திரும்ப வேண்டியதாயிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/441&oldid=788244" இலிருந்து மீள்விக்கப்பட்டது