உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/442

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடியரசுத் தலைவர் கலந்து கொண்ட மாநாடு 403 ஏழாவது முறையாகத் துணைவேந்தர் ஏன்? அடுத்த நாள் காலை 10-30 மணிக்கு சென்னைப் பல்கலைக் கழகப் பேரவையின் தனிக்கூட்டம் நடக்கும் என்று சுற்றறிக்கை வந்தது. தனிக் கூட்டம் எதற்கு? மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை, துணைவேந்தரைப் புதிதாக நியமிக்க வேண்டும். அதற்காக, பேரவை கூடி, மூவர் அடங்கிய பட்டியல் கொடுக்க வேண்டும். அம் மூவரில் ஒருவரை ஆளுநர், துணைவேந்தராக நியமிப்பார். அது அக் கால நடைமுறை ஆகும். - அந்த முறையின் கீழ், பட்டியல் கொடுக்க, பேரவையின் தனிக் கூட்டத்தைக் கூட்டியிருந்தார்கள். கையாண்ட யுக்தி என்ன? நான்காவது வேட்பாளர் ஒருவர் நிற்கும்படி செய்வது; அதைக் காரணம் காட்டி, வாக்கெடுப்பது; அவ் வாக்கு எடுப்பில் டாக்டர் இலட்சுமணசாமி முதலியாருக்கு மிக அதிகமான வாக்குகளும், அடுத்த இருவருக்கும் பெயருக்குச் சில வாக்குகளும் கிடைக்கச் செய்தல், அப் போதைய உபாயம். முதலில் இருப்பவருக்கு நூற்றிருபதும் அடுத்தவர்களுக்கு அறுபதும் அய்ம்பதும் கிடைத்தால் மூவரும் சமம் என்று சொல்ல. முடியாதல்லவா? முதல் எண்ணிக்கை வாக்குப் பெற்றவரையே நியமிக்கும் நிலையில் இருந்து நழுவ முடியாது. டாக்டர் முதலியார்தான், ஏழாவது முறையும் துணை வேந்தராக வருவார் என்பது கல்வி உலகில், அனைவருக்கும் தெரியும். இருப்பினும் அரசின் ஒரே பிரதிநிதியாகிய பொதுக்கல்வி இயக்குநர், பேரவையின் தனிக் கூட்டத்திற்கு வராமற் போனால், அவச்சொல்லுக்கு இடமாகுமென்று அஞ்சினேன். மாமனார் சுப்பிரமணியம் பிள்ளை மறைவு நினைப்பது எல்லாம் நடக்குமா? 30-7-1960 மாலை 5 மணி அளவில், என் கார் என் வீட்டருகில் வந்து நின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/442&oldid=788245" இலிருந்து மீள்விக்கப்பட்டது