உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/451

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

412 நினைவு அலைகள் "நான் அவர்கள் மாநாடுகளில் கலந்துகொண்டு கவனித்த பிறகே, இந்த மதிப்பீட்டிற்கு வந்தேன். -- “நாம் புறக்கணித்தால், அவர்கள் வேறு எங்காவது ஆதரவு தேடத் தொடங்கி விடுவார்கள். அவர்கள் நம் வீட்டுப் பிள்ளைகள். தயவு செய்து கடலூர் மாநாட்டிற்கு வந்து கலந்து கொள்ளுங்கள்” என்று வேண்டினேன்: "வரவேற்புக்குழுத் தலைவர் யார்?' என்று அமைச்சர் கேட்டார். - - "கூட்டணி, ஒரு மரபைப் பின்பற்றி வருகிறது. எந்த நகரில், மாநாடு நடத்துகிறார்களோ, அந்நகர் மன்றத் தலைவரை வரவேற்புக்குழுத் தலைவராகக் கொள்வதே வழக்கம். “அதையொட்டி, கடலூர் நகர் மன்றத் தலைவர், திரு. ஏ. ஆர். தாமோதரன், வரவேற்புக்குழுத் தலைவர் ஆவார்” என்றேன். கல்வி அமைச்சர், கடலூர் மாநாட்டில் கலந்துகொள்ள இசைந்தார். ஆனால் ஒரு நிபந்தனை விதித்தார். - மறுநாள், இராமுன்னியிடம் அமைச்சரின் இசைவையும் அவருடைய நிபந்தனைன்யயும் தெரிவித்தேன். - அவருக்கு மட்டற்ற மகிழ்ச்சி. அமைச்சர் நிபந்தனைப்படி மாநாட்டின்போது தொழிலாளர்கள்போல ஊர்வலம் நடத்துவது இல்லையென்று சொன்னார். i. அதை உரிய குழுக் கூட்டத்தில் வைத்தார். ஒவ்வொரு மாநாட்டிலும் பேரணி நடத்திப் பழக்கப்பட்டவர்களுக்கு எப்படியோ இருந்தது. -- - நீண்ட விவாதத்திற்குப்பின் முழக்கங்கள், கோரிக்கை அட்டைகள் முதலிய ஏதும் இல்லாது, வருகை புரிந்தோர் அனைவரும் தங்குமிடங்களில் இருந்து, மாநாட்டுக் கொட்டகைக்கு ஒழுங்கான வரிசையில் போவது என்று முடிவு செய்யப்பட்டது. அம் முடிவை என்னிடம் சொன்னார்கள். நான் அமைச்சரிடம் கூறினேன். அமைச்சரின் கடலூர் மாநாடு வருகை உறுதி செய்யப்பட்டது.

சில நாள்கள் சென்றன. கல்வி அமைச்சர், சென்னைத் தலைமை மருத்துவமனையில் அறுவை மருத்துவத்திற்கு ஆளாக நேர்ந்தது. அதையறிந்ததும் கடலூர் மாநாட்டை ஒத்தி வைத்துக் கொள்ள எண்ணினார்கள். அதை என் மூலம் அமைச்சருக்கும் சொல்லி அனுப்பினார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/451&oldid=788255" இலிருந்து மீள்விக்கப்பட்டது