உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/450

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வி அமைச்சர் கலந்து கொண்ட தொடக்கப் பள்ளி மாநாடு 411 'அய்யா! கூட்டணி, அவ்வப்போ து, வட்ட மாவட்ட மாநில மாநாடுகள் நடத்துவதைத் தாங்கள் அறிவீர்கள். அவற்றில் சிலவற்றில் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளிர்கள். “நம் கல்வி அமைச்சரை, மாநில மாநாட்டில் கலந்துகொள்ள மூன்று நான்கு முறை அழைத்து விட்டோம். ஒரு முறையும் ஒப்புதல் தரவில்லை. அடுத்து, கடலூரில் மாநில மாநாடு நடக்க இருக்கிறது. "நேற்று அமைச்சரைக் கண்டோம். மாநாட்டிற்கு அழைத் தோம் அதில் அவ்ர் கலந்துகொள்ள இசைய வில்லை. "அவர் வசதிப்படி மாநாட்டின் தேதிகளை மாற்றி வைப்பதாகவும் கூறினோம். அதற்கும் இசைய வில்லை. “இப்போது எங்கள் வேண்டுகோள் தாங்கள் தலையிட்டு, அமைச்சரைக் கடலூர் மாநாட்டிற்கு அழைத்து வரவேண்டும் என்பதாகும். - "தயவுசெய்து அமைச்சருக்குப் பரிந்துரையுங்கள்: ஒப்புதல் பெற்றுத் தாருங்கள்” - இப்படித் தூதுக்குழு கேட்டது. “எனக்கு அமைச்சரிடம் தனிச் செல்வாக்கு இல்லை. நானும் அவரிடம் தனி உரிமை கொண்டாடுவதில்லை. “அமைச்சருக்கும் அவருடைய திட்டங்களை நிறைவேற்ற வேண்டிய தொண்டர்களுக்கும் மெய்யான இணக்கம் தேவை. அதை ஏற்படுத்த முயல்வது எனது கடமைகளில் ஒன்றே” என்று பதில் சொல்லி அனுப்பினேன். நிபந்தனையுடன் இசைவு மறுநாள் அமைச்சரைக் கண்டேன். கூட்டணியின் சார்பில் அழைப்பை விடுத்தேன். _* அமைச்சர் சி. சுப்பிரமணியம் மனம் விட்டுப் பேசினார். "கூட்டணி, தீவிர அரசியல் சார்பு உடையது என்கிறார்களே” என்று அமைச்சர் கேட்டார். “இதைப்பற்றி என்னைவிட உங்களுக்குத்தான் சரியான தகவல் கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு. . "தனிப்பட்ட முறையில், கணிசமான ஆசிரியர்கள் அரசியல் கோட்பாடு உடையவர்களாக இருக்கலாம். ஆனால், அவர்களும் தீவிர ஈடுபாடு உடையவர்கள் அல்லர். கூட்டணியை அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட பொது அமைப்பாகவே நடத்தி வருகிறார்கள். o

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/450&oldid=788254" இலிருந்து மீள்விக்கப்பட்டது