பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/449

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

410 நினைவு அலைகள் இருவரும் சென்னைக்கு வந்து சேர்ந்தார்கள். காந்தம்மாவுக்கு மெல்ல ஆறுதல் கூறினார்கள். “இனி, அய்யாவுக்கு நீங்கள்தானே ஒரே நம்பிக்கை. மிகப் பெரிய நிகழ்ச்சியை அவர் பொறுப்பேற்று நடத்தும்போது, நீங்கள் உடன் இல்லாவிட்டால், அவர்கள் மனம் என்ன பாடுபடும்? சற்று ஊகித்துப் பாருங்கள். எப்படியாவது. தைரியப் படுத்திக்கொண்டு. மாநாட்டுக்கு வந்து சேருங்கள்” என்று மாறி மாறி வேண்டினார்கள். காந்தம்மா, வர ஒப்புக் கொண்டார்; வந்தார்; வேதனையை அடக்கிக்கொண்டு ஆலோசனைகள் கூறினார்: மாநாடு முடியும் வரை இருந்து எனக்கு உயிர்க் காற்றாக விளங்கினார். F 43. கல்வி அமைச்சர் கலந்துகொண்ட தொடக்கப் பள்ளி மாநாடு பொதுச் செயலாளர் ராமுன்னி பல்லாண்டு காலம் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் நலனுக்கு ஒரே ஒர் அமைப்புதான் இருந்தது. அதுவே, தமிழ்நாடு ஆரம்ப ஆசிரியர் கூட்டணி என்பதாகும். அதில் உறுப்பினர்களாக இருந்தவர்கள், பல்வேறு சமய, சமுதாய, அரசியல் கருத்தும் பற்றும் உடையவர்கள். எனினும், ஒரே அமைப்பின் கீழ் இயங்கும் அளவுக்குக் கட்டுப்பாடு உடையவர்களாக இருந்தார்கள். கூட்டணியின் தலைமைப் பதவியில் அவ்வப்போது மாறுதல் வரக்கூடும். ஆனால், மாநிலப் பொதுச் செயலாளராகத் தொடர்ந்து மாஸ்டர் ராமுன்னி இருந்து வந்தார். பொதுக் கல்வித்துறைக்கு முழு ஒத்துழைப்பு தந்தார். மேலும் இயக்கத்தில் உள் விவகாரங்கள் எழுந்தால், அவைபற்றியும், என்னிடம் நம்பிக்கை வைத்து, கலந்து ஆலோசிப்பார். கூட்டணி யினர் என்னை அவர்களில் மூத்தவனாகவே கருதினார்கள். கல்வி அமைச்சரின் மறுப்பு ஒரு நாள், திரு. இராமுன்னியும் வேறு சிலரும் கூட்டணியின் சார்பில் என்னைக் கண்டார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/449&oldid=788252" இலிருந்து மீள்விக்கப்பட்டது