உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/448

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடியரசுத் தலைவர் கலந்து கொண்ட மாநாடு - 409 காந்தியவாதிகள் அல்லாதவர்களும் காந்திய மனமாற்றத்தின் சிறப்பை உணர்ந்தார்கள். மாநாட்டின் வரவேற்புரையைத் திரு. முகமது அன்வர் ஆற்றினார். நன்றி உரையைத் திரு.வி.கே.கிருஷ்ணமூர்த்தி கூறினார்; அறிக்கையை நான் படித்தேன். முதல் அமைச்சரும் கலந்து கொண்டு, சிறப்புரை ஆற்றினார் என் று சொல்லத் தேவையில்லை. வேலூர் பள்ளிச் சீரமைப்பு மாநாட்டைக் கான, நெய்யாடு பாக்கத்திலிருந்து எழுபத்தாறு வயதில் இருந்த என் தந்தையும் அவருக்குச் சில ஆண்டுகள் இளையவரான என் மாமா, திரு நெ. கோ. சுந்தரசேகரனும் வந்து இருந்தார்கள். மாநாட்டில் இருந்து, உர்ைகளைக் கேட்டு மகிழ்ந்தார்கள். என்னை அவையத்து முந்தியிருக்கச் செய்த என் தந்தையும் என் மாணவப் பருவத்தில் அதற்குத் துணை நின்ற என் மாமாவும் அடைந்த மகிழ்ச்சிக்கு ஈடு ஏது? ஒதுங்கி, ஒதுங்கிப்போய்க் கொண்டு இருந்த வடிவேலு’ தேவைப்படும்போது பேரவையின் முன்பும் ஏறுபோல் நிற்பான் என்பதை அன்றே கண்டு நிறைவு கொண்டார்கள். வள்ளுவன் மறைவுக்குப்பின் காந்தம்மா கலந்துகொண்ட நிகழ்ச்சி அம் மாநாடு பற்றி முடிவானதுமுதல், என் மனைவி காந்தம்மாவை அங்கு அழைத்துப்போக விரும்பினேன். முன்னேற்பாடுகளுக்காக, வேலூர் போனபோது அழைத்துப் போய் விட்டால் துயரம் தீர்ந்துவிடும் என்று எண்ணி அழைத்தேன். ஒன்பது திங்களாக, வீட்டோடு முடங்கிக்கிடந்த காந்தம்மா மறுத்து விட்டார். கண்டிப்பாகச் சொல்ல எனக்கு மனம் இல்லை. பக்குவமாகச் சொல்லி அவரை வீட்டைவிட்டு வெளியே அனுப்ப, எவருக்கும் துணிவில்லை. - அப் பேச்சை எடுத்தால் காந்தம்மா அழுது விடுவார். காரணம்? பல ஊர்களுக்கு வள்ளுவனும் உடன் வந்திருக்கிறான். இதை, எனது தோழர்களான மதுரை மண்டல ஆய்வாளர். திரு. முகமது கனியும், கோவை மண்டல ஆய்வாளர் திரு. சு. இராஜமும் கேள்விப்பட்டார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/448&oldid=788251" இலிருந்து மீள்விக்கப்பட்டது