உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/455

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

416 நினைவு அலைகள்


“நிர்வாக இயந்திரம் பல மட்டத்திலும் கடுமையாக எதிர்த்தது. அரசியல் வட்டாரங்கள் முடியுமா என்று மலைத்தன. அளவுக்கு மீறிய பளுவை அரசுக்குச் சுமத்தி விடுகிறார்களே” என்று அஞ்சியவர்கள் பலர். o

"கல்வி அமைச்சர் மாண்புமிகு சுப்பிரமணியம் அவர்களின் தெளிவும் ஆதரவும் உறுதியும் துணைக்கு வந்ததால்தான் மேற்படி திட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 1-4-1955 முதல் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் பெற்ற மேற்படி நன்மைகளை 1-4-1958 முதல் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் பெறும்படி அதை மேலும் விரிவுபடுத்தி உள்ளார். “அடுத்துக் கல்லூரி ஆசிரியர்களுக்கும் இவற்றை வழங்குவார் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இப்படிப்பட்ட கருணை உள்ளம் படைத்தவரா உங்களைக் கைவிட்டு விடுவார்?” “சென்னை மாநில அரசின் கல்விக் கொள்கை தமிழ் மண்ணில் வாழ்கிற அனைவருக்கும் சாதி வேற்றுமை பாராட்டாமல் பதினோராவது வகுப்பு வரையில் இலவசக் கல்வி அளிப்பது என்பதாகும். “இக் கொள்கையும் நிர்வாக இயந்திரத்திற்கு எட்டிக்காயாக இருந்தது. அதையும் மீறிப் படிப்படியாக எல்லோர்க்கும் இலவசக் கல்வி' என்ற கொள்கையைத் தொடர்ந்து விரிவாக்கி வருகிறார். ஆசிரியரும் சம்பாதிக்கலாம் இவ்வளவு முற்போக்குச் சிந்தனையுடைய, பொதுப் பார்வையுடைய கல்வி அமைச்சர் அமைச்சராவதற்கு முன் கோவையில் புகழ்பெற்ற வழக்கறிஞர் என்பதை நினைவூட்டுகிறேன். "மாதம் ஐயாயிரம் ரூபாய் சம்பாதித்துக்கொண்டு மிகுந்த செல்வாக்குடன் இருந்த அவர், அதைத் தியாகம் செய்து விட்டு ஆயிரம் ரூபாய் சம்பளமுள்ள அமைச்சர் பதவிக்கு வந்துள்ளார். "அவர் எக் காரணம் பற்றியாவது அமைச்சர் பதவியை உதறிவிட்டு மீண்டும் வழக்கறிஞராக ஆனால் எவ்வளவோ சம்பாதிக்கலாம். "அதேபோல் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களில் பலர் இப்போதும் வேறு பணிகளுக்குப் போனால் நன்றாகவே வாழ்விர்கள். பதவி விலகல் அமைச்சருக்கும் தியாகம் அல்ல, உங்களுக்கும் அது ஒரு பெரிய தியாகம் அல்ல.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/455&oldid=788259" இலிருந்து மீள்விக்கப்பட்டது