உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/456

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்விஅமைச்சர் கலந்து கொண்ட தொடக்கப் பள்ளி மாநாடு 4TF “கப்பற் படையில் ஒரு மரபு உண்டு. ஒரு கப்பல் மூழ்க நேர்ந்தால் கடைசியாக வெளியேற வேண்டியவன் யார் தெரியுமா? கப்பல் தலைவனே. o "ஆசிரியர்களாகிய நீங்கள் பதவி விலகிக் கல்விக் கப்பலை மூழ்கடிக்க முயன்றாலும், அதன் இயக்குநன் என்ற மறையில் கான் கடைசி வரை இருந்தாக வேண்டும். 'அப்படியிருக்கப் போகும் உங்கள் முதல் தொண்டனாகிய எனக்குத் துணை வேண்டாமா? "ஊர் மக்கள் உங்களை நம்பி அல்லவா தங்கள் குழந்தைச் செல்வங்களை ஒப்படைத்திருக்கிறார்கள்? "பகல் உணவு, சீருடை, ப்ள்ளிச் சீரமைப்பு முதலிய மேம் பாட்டுத் திட்டங்களுக்கு எங்கோ இருக்கும் சுந்தரவடிவேலுவை நம்பியா, மக்கள் உதவி புரிந்து வருகிறார்கள். == “உள்ளுர் ஆசிரியர்களை நம்பியல்லவா தாராளமாக வழங்குகிறார்கள். 'எனவே, ஆற்றல் மிக்க - எடுத்துக்காட்டான தமிழ்நாடு ஆசிரியர் படை, ஏதோ கேடு வந்துவிடும் என்று அஞ்சிப் பதற வேண்ட்ாம். தொடர்வோம்; கல்வித் தொண்டைத் தொடர்வோம். “நம் அரும் தமிழ் நாட்டின்கண் எல்லோரும் கல்வி கற்கும் நிலையை உருவாக்குவோம். "வாரும் தோழர்காள்! இது நாம் நாட்டுக்கு ஆற்றும் கடமை; சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டிய உன்னதமான தொண்டு ' “எப்போதும் வெல்லும் தமிழ்நாட்டு ஆசிரியர் படை, இப்போதும் வெல்லும் என்னும் நம்பிக்கையோடு செயல்ப்டுவீர். பழையபடி செயல்படுவீர்” என்று முடித்த பிறகே இப் பக்கமும் அப் பக்கமும் திரும்பினேன்.

  • *

கல்வி அமைச்சரின் மகிழ்ச்சி நான் என் இடத்திற்கு வரவும் என்னைப் பார்த்துக் கல்வி அமைச்சர் கனிவோடு மிக நன்றாகப் போய்க்கொண்டு இருந்தது. சட்டென்று 25 மணித்துளிகளில் முடித்து விட்டீர்களே. மேலும் பேசி இருக்கலாம் என்று அகமகிழப் பாராட்டினார். மாநாட்டின் போக்கே நல்லபடி மாறிவிட்டது. கல்வி அமைச்சர் மிகுந்த மன நிறைவோடு காங்கிரஸ் பொதுக் கூட்டத்திற்குச் சென்றார். நான் பயணிகள் விடுதிக்குச் சென்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/456&oldid=788260" இலிருந்து மீள்விக்கப்பட்டது