உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/457

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

418 44. பத்மபூஷன் பத்மபூரீ ஆயிற்று கேர் நிறுவனத்தின் உதவி மாநில முதலமைச்சர்கள், அவ்வப்போது, புது தில்லி சென்றுவர நேரிடும். 1960 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அப்படியொரு முறை தில்லி சென்றுவந்த முதலமைச்சர், என்னைக் கூப்பிட்டார். உடனே சென்றேன். என்னை உட்காரச் சொல்லிவிட்டு, பின் வருமாறு உரைத்தார். "நான் தில்லியிலிருந்தபோது, வாணிக அமைச்சர் திரு டி. டி. கிருஷ்ணமாச்சாரியின் யோசனைப்படி, பெரிய அமெரிக்க அலுவலர் ஒருவர், என்னைப் பேட்டி கண்டார். அப்போது, டி. டி. கே. யும் உடன் இருந்தார் “அந்த அமெரிக்கர், கேர் நிறுவனத்தின் சார்பில் என்னைக் கண்டார். எங்கெங்கும் அமெரிக்க நிவாரணப் பணிக் கூட்டுறவுக் கழகம், என்பதன் சுருக்கம் கேர்’ என்று சொன்னார். “தமிழ் நாட்டில் நடக்கும் பகல் உணவுத் திட்டத்தைப்பற்றிக் கேள்விப்பட்டு, மதுரை முதலிய சில ஊர்களில் எப்படி நடக்கிறது என்று வேடிக்கை பார்ப்பவர்கள்போல், பார்த்தார்களாம். “ஒவ்வொரு மையத்திற்கும் ஒரு வங்கிக் கணக்கு இருப்பதைக் கண்டார்களாம். அரசு நிதி உதவி, பலர் நன்கொடை ஆகியவை உடனுக்குடன் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. “செலவுக்குத் தேவையான அளவு பணமே எடுக்கப்படுகிறது. “பொருள்கள் பற்றிய கணக்குகள் சரியாக இருந்தனவாம். “அமெரிக்க நிறுவனத்திற்குத் திருப்தி. நம் பகல் உணவுத் திட்டத்திற்கு உதவியாகச் சோள இரவை, எண்ணெய், பால் பொடி ஆகியவை கொடுக்கச் சித்தமாய் இருப்பதாக அமெரிக்கர் கூறினார். “உதவியைக் கொள்கையளவில் ஏற்றுக்கொள்ளுகிறேன். விவரங்களைச் சென்னைக்கு வந்தால் பேசிக்கொள்ளலாம் என்று கூறி விட்டு வந்தேன்” என்று சொல்லும்போது என் முகம் வாடி விட்டது. அதை மறைக்க இயலவில்லை. வாட்டத்திற்குக் காரணம் முதலமைச்சர் காமராசர் என் முகவாட்டத்தைக் கவனித்து விட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/457&oldid=788261" இலிருந்து மீள்விக்கப்பட்டது